பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா? Description: பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா?


பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா?

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என பத்மஸ்ரீ கமலஹாசன் கெத்து காட்டும் வெயிட்டான புரோகிராம் பிக்பாஸ். பிரபலங்கள் நூறு நாள்கள் தொலைபேசி, செய்தித்தாள், டிவி பார்க்காமலும், குடும்பத்தினருடன் தொடர்பே இல்லாமலும் வாழும் ரியாலிட்டி ஷோவான இதற்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர் படை உண்டு.

கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் இதற்கு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது. ஏற்கனவே 2 சீசன்களை வெற்றிகரமாக முடித்த பிக்பாஸ், இப்போது சீசன் 3க்கு தயாராகி வருகிறது. கடந்த இருதினங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 3ன் ப்ரமோ வீடீயோவை வெளியிட்டது விஜய் டிவி. அதிலும் கமலே நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார்.

இப்போது அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் போட்டியாளரை உறுதி செய்துள்ளது விஜய் டிவி. இதில் ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த ஜாங்கிரி மதுமிதா முதல் போட்டியாளராக உள்ளே செல்கிறார். இவர் ஆரம்பத்தில் சின்ன பாப்பா...பெரிய பாப்பா சீரியலிலும் நடித்திருந்தார்.

அண்மையில் தனது உறவினரும், உதவி இயக்குனருமான மோசஸ் ஜோயலை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த கையோடு கணவரை மூன்று மாதம் பிரிந்து இருக்கும் ரிஸ்க் கேமை ரஸ்க் சாப்பிடுவது போல் கையில் எடுத்திருக்கும் ஜாங்கிரிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


நண்பர்களுடன் பகிர :