உயிரைகுடித்த செல்பி மோகம்... கொழும்பு கடற்கரையில் நிகழ்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் மருத்துவர்..! Description: உயிரைகுடித்த செல்பி மோகம்... கொழும்பு கடற்கரையில் நிகழ்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் மருத்துவர்..!

உயிரைகுடித்த செல்பி மோகம்... கொழும்பு கடற்கரையில் நிகழ்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் மருத்துவர்..!


உயிரைகுடித்த செல்பி மோகம்... கொழும்பு கடற்கரையில் நிகழ்ந்த சோகம்..  பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் மருத்துவர்..!

இன்றைய சூழலில் இளம் தலைமுறையினரை செல்பி மோகம் பாடாய் படுத்துகிறது. அதற்கு நன்கு படித்தவர்கள் கூட அடிமையாய் இருக்கின்றனர். அதனால் தொடர்ச்சியாக பல அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது கொழும்பில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் செல்பி மோகத்தால் மரணம் அடைந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையாபேட்டையை சேர்ந்த பெண் மருத்துவர் உத்குரு ரம்யாகிருஷ்ணன். கோவாவில் 108 அவசர சிகிட்சை பிரிவில் பணி செய்ட்துவந்த இவர் நண்பர்களுடன் கொழும்பு வந்துள்ளார். அங்குள்ள கடலில் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பெரிய அலை ஒன்று வந்தது. இதில் மருத்துவர் ரம்யாவும், அவரது தோழியையையும் கடல் அலை இழுத்துப் போனது. இதில் ரம்யாவின் தோழியை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து மூட்டனர். துரதிஷ்டவசமாக ரம்யாவை காப்பாற்ற முடியவில்லை. சிறிதுநேரத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த ரம்யாவின் தந்தை சில மாதங்களுக்கு முன்புதான் இறந்தநிலையில் அதே குடும்பத்தில் இன்னொரு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல் இதே கடலில் செல்பி எடுத்து இருவர் பலியானதைத் தொடர்ந்துதான் அந்தபகுதி ஆபத்தான பகுதி என பதாகை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :