இது வயிறா? அல்லது இரும்பு பேக்டரியா? தொழிலாளியின் ஸ்கேன் ரிப்போர்டை பார்த்து அலறிய டாக்டர்கள்...! Description: இது வயிறா? அல்லது இரும்பு பேக்டரியா? தொழிலாளியின் ஸ்கேன் ரிப்போர்டை பார்த்து அலறிய டாக்டர்கள்...!

இது வயிறா? அல்லது இரும்பு பேக்டரியா? தொழிலாளியின் ஸ்கேன் ரிப்போர்டை பார்த்து அலறிய டாக்டர்கள்...!


இது வயிறா? அல்லது இரும்பு பேக்டரியா? தொழிலாளியின் ஸ்கேன் ரிப்போர்டை பார்த்து அலறிய டாக்டர்கள்...!

பொதுவாகவே ஸ்கேன் ரிப்போர்டைப் பார்த்துவிட்டு மருத்துவர்கள் கூறும் தகவல்களை கேட்டு, நோயாளிகள் தான் அலறுவார்கள். ஆனால் ஒரு நோயாளியின் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு மருத்துவர்கள் அலறினால் அது ஆச்சர்யம் தானே? அப்படி ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் போலோ சங்கர். தோட்டத்தொழிலாளியான இவருக்கு தற்போது 42 வயது ஆகிறது. கடந்த சில வாரங்களாகவே இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்தது. உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிட்சையில் இருந்தால். என்னதான் மருந்து, மாத்திரைகள் கொடுத்தும் வலி தீராததால் ஸ்கேன் எடுத்துவருமாரு மருத்துவர்கள் சொன்னார்கள்.

ஸ்கேனில் அவர் வயிற்றில் சில இரும்பு பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிட்சை செய்து, வயிற்றில் இருந்த 116 இரும்பு ஆணிகள், நீளமான வயர், இரும்பு குண்டுகள் ஆகியவற்றை மருத்துவர்கள் எடுத்தனர்.

இதுகுறித்து ஆப்ரேசன் செய்த மருத்துவர் அனில் சைனி, ‘’இரும்பு ஆணிகள் 6.5 செ.மீ அளவு இருந்தது. இத்தனை இரும்பு பொருள்களை அவர் எப்படி விழுங்கினார் என அவரது குடும்பத்துக்கே தெரியவில்லை. ஆப்ரேசன் முடிந்து, மயக்கத்தில் இருக்கும் நோயாளி எழுந்தபின் வந்து சொன்னால் தான் தெரியும். ஸ்கேன் ரிப்போர்டைப் பார்த்து இது வயிறா? அல்லது இரும்பு பேக்டரியா என மிரண்டே போனோம்.”என்கிறார்.


நண்பர்களுடன் பகிர :