சொன்னதைச் செய்து காட்டிய தல அஜித்... தன்னம்பிக்கை மனிதனின் 96 பிளாஸ்பேக்! Description: சொன்னதைச் செய்து காட்டிய தல அஜித்... தன்னம்பிக்கை மனிதனின் 96 பிளாஸ்பேக்!

சொன்னதைச் செய்து காட்டிய தல அஜித்... தன்னம்பிக்கை மனிதனின் 96 பிளாஸ்பேக்!


சொன்னதைச் செய்து காட்டிய தல அஜித்... தன்னம்பிக்கை மனிதனின் 96 பிளாஸ்பேக்!

96 பிளாஸ்பேக் என்று தலைப்பை படித்ததும் விஜய்சேதுபதி, த்ரிஷா, பள்ளிக்கூட காதல் என லவ் மேட்டருக்குள் போய் விடாதீர்கள். இது இன்று தமிழகமே கொண்டாடும் தல அஜித்தின் தன்னம்பிக்கை தொடர்பான பிளாஸ்பேக்...96ம் வருடத்தில் நடந்த நிகழ்வு என்றவகையில் இது 96 பிளாஸ்பேக்!

‘’ஏற்றி விடவோ தந்தையும் இல்லை, ஏந்திக் கொள்ள தாய்மடி இல்லை. என்னை நானே சிகரத்தில் வைத்தேன்” என அட்டகாசம் படத்தில் வரும் ‘’உனக்கென்ன உனக்கென்ன’’ பாடல் தல அஜித்தின் திரைத்துறை வாழ்க்கையை பேசும். சாதாரண பைக் மெக்கானிக்காக தன் வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எந்த பிண்ணனியும் இல்லாமல் இன்று முக்கிய இடத்துக்கு வந்திருக்கிறார் அஜித்.

துவக்கத்தில் அஜித் விஜய், பிரசாந்த், விக்ரம் என பலருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். 1996ல் கல்லூரி வாசல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் பிரசாந்த் தான் மெயின் ஹீரோ. அஜித்குமார் செகண்ட் ஹீரோ. அப்போது பிரசாந்த் அதிக ஹிட் கொடுத்து டாப்ஸ்டாராக ரசிகர்கள் மனதில் இருந்தார். அஜித்தோ அப்போது தான் துண்டு, துக்கடா வேடம் கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது வெளிப்புறப்படப்பிடிப்பில் பிரசாந்துடன் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சூட்டிங் பார்க்க வந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கவே அலைமோதினர். ரொம்ப சொற்பமானவர்களே அஜித்தின் பின்னால் படம் எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் போய் இருக்கிறார்கள்.

இதைப் பார்த்துவிட்டு சினிமா துணை இயக்குநர் ஒருவர், இதற்கெல்லாம் தல அஜித் வேதனைப்படுவார் என நினைத்துக்கொண்டு, ‘’இதையெல்லாம் பார்த்து மனம் வருந்தாதீங்க” என அஜித்திடம் சொல்ல, ‘’ஒருநாளு நிச்சயம் இந்த மக்கள் கூட்டத்தை என் பின்னால் வரவழைச்சு காட்டுறேன். “என தன்னம்பிக்கையோடு அவர் கண்களைப் பார்த்து சொன்னார்.

அதை இன்றல்ல, என்றோ செய்தும் காட்டி விட்ட தல...இப்போது ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அல்லவா அமர்ந்திருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :