மலை மீது ஏறிவரும் கரடிக்குட்டி... அடித்தே தண்ணீரில் தள்ளிய மனிதர்கள்... எங்கே போனது அன்பு உள்ளம்? நெஞ்சை பிசையும் வீடீயோ Description: மலை மீது ஏறிவரும் கரடிக்குட்டி... அடித்தே தண்ணீரில் தள்ளிய மனிதர்கள்... எங்கே போனது அன்பு உள்ளம்? நெஞ்சை பிசையும் வீடீயோ

மலை மீது ஏறிவரும் கரடிக்குட்டி... அடித்தே தண்ணீரில் தள்ளிய மனிதர்கள்... எங்கே போனது அன்பு உள்ளம்? நெஞ்சை பிசையும் வீடீயோ


மலை மீது ஏறிவரும் கரடிக்குட்டி... அடித்தே தண்ணீரில் தள்ளிய மனிதர்கள்...   எங்கே போனது அன்பு உள்ளம்? நெஞ்சை பிசையும் வீடீயோ

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் திருவருட் பிரசாக வள்ளலார். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என கேட்டவர் அவர். அப்படிப்பட்டவர்கள் பிறந்த இதே மண்ணில் மலை மீது ஏறிக் கொண்டிருந்த கரடிக் குட்டியை கல்லாலேயே அடித்து கீழே தண்ணீருக்குள் தள்ளிய கொடூர மனிதர்களின் வீடீயோ மனசாட்சியை பிசைகிறது.

நம் இந்திய தேசத்தின் ஜம்முகாஷ்மீர் பகுதியில், அதிலும் கார்கில் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இங்கு கீழே தண்ணீர் சென்று கொண்டிருக்க, அதை ஒட்டி இருக்கும் மலையில் கரடிக்குட்டி ஒன்று ஏறிக் கொண்டிருந்தது.

பார்ப்பதற்கே அது அழகான காட்சியாக இருந்தது. ஆனால் மேலே இருந்த மனிதர்கள் அதை கலால் தாக்கிக் கொண்டே இருந்தனர். அதனால் நிலைகுலைந்த அந்த கரடி தத்தி, தத்தி மேலே ஏறிக் கொண்டு இருந்தது.

ஒருகட்டத்தில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கரடி பிடியை விட்டது. இதில் மலையில் இருந்து உருண்டே போய் தண்ணீருக்குள் வீழ்ந்தது. இதை மிருகத்தனத்தோடு அந்த கல் எறிந்த மனிதர்கள் ரசிக்கின்றனர்.

இதை முகமது அஷா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட அது இப்போது வைரலாகி வருகிறது. ஜம்மு_காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃதியும் கரடியை இப்படிச் செய்தது மனிதத்தன்மையற்ற செயல் என கருத்து தெரிவித்துள்ளார். விலங்கின ஆர்வலர்களும் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.,.


நண்பர்களுடன் பகிர :