தீவிரவாதம் வளர்வது ஏன்? நடிகர் ராஜ்கிரண் எழுதிய கவிதை...! Description: தீவிரவாதம் வளர்வது ஏன்? நடிகர் ராஜ்கிரண் எழுதிய கவிதை...!

தீவிரவாதம் வளர்வது ஏன்? நடிகர் ராஜ்கிரண் எழுதிய கவிதை...!


தீவிரவாதம் வளர்வது ஏன்? நடிகர் ராஜ்கிரண் எழுதிய கவிதை...!

மகாத்மா காந்தி கொலை குறித்தும், தீவிரவாதம் குறித்தும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடியே பதில் சொல்லி இருந்தார்.

இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் ராஜ்கிரண் தீவிரவாதம் ஏன், எப்படி உருவாகிறது? மதங்கள் உடன் அதற்கு தொடர்பு உண்டா என கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தன் முகநூல் பக்கத்தில் அந்த கவிதையை போட்டு உள்ளார். அந்த கவிதை இது தான்...

எந்த இந்துவும் பயங்கரவாதியாக இருப்பதில்லை. அப்படி இருந்தால், அவன் உண்மையான இந்து இல்லை.

எந்த இஸ்லாமியனும் பயங்கரவாதியாக இருப்பதில்லை.

அப்படி இருந்தால், அவன் உண்மையான இஸ்லாமியன் இல்லை.

எந்த கிருஸ்துவனும் பயங்கரவாதியாக இருப்பதில்லை.

அப்படி இருந்தால், அவன் உண்மையான கிருஸ்துவன் இல்லை.

எந்த பவுத்தனும் பயங்கரவாதியாக இருப்பதில்லை.

அப்படி இருந்தால், அவன் உண்மையான பவுத்தன் இல்லை.

எந்த சீக்கியனும் பயங்கரவாதியாக இருப்பதில்லை.

அப்படி இருந்தால், அவன் உண்மையான சீக்கியன் இல்லை.

எந்த ஜைனனும் பயங்கரவாதியாக இருப்பதில்லை.

அப்படி இருந்தால், அவன் உண்மையான ஜைனன் இல்லை.

எந்த நாத்திகனும் பயங்கரவாதியாக இருப்பதில்லை.

அப்படி இருந்தால், அவன் உண்மையான நாத்திகன் இல்லை.

உண்மை இப்படி இருக்கையில்,

எல்லாத்தரப்பினரும் பயங்கரவாதச்செயல்கள் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றனவே அது எப்படி...?

அவரவர் மதத்தைப்பற்றிய புரிதல் இல்லாமை, கல்லாமை,

அவரவர் பிறப்பும், தாய் தந்தையரின் வளர்ப்பும் சரியில்லாமை,

அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்துக்காகச்செய்யும் பிரித்தாளுமை...

ராஜ்கிரண் கவிதை எப்படி இருக்கிறது நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :