நெஞ்சுசளி முதல் தோல்நோய்வரை தெறித்து ஓடவிடும் பூ... பலநோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி...! Description: நெஞ்சுசளி முதல் தோல்நோய்வரை தெறித்து ஓடவிடும் பூ... பலநோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி...!

நெஞ்சுசளி முதல் தோல்நோய்வரை தெறித்து ஓடவிடும் பூ... பலநோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி...!


நெஞ்சுசளி முதல் தோல்நோய்வரை தெறித்து ஓடவிடும் பூ... பலநோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி...!

என்னதான் கோடி, கோடியாய் பணம் இருந்தாலும் நோய் இல்லாத வாழ்க்கை தரும் நிம்மதிக்கு அது ஈடாகாது. ஆம். அதனால் தான் நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் எனக் கூறப்படுகிறது. நோய் இல்லாத வாழ்க்கைக்கு இயற்கை நமக்கு பல பாதைகளை காட்டியுள்ளது. அதில் ஒன்று தான் வெட்சி பூ.

வெட்சி பூ வெட்சி செடியில் இருந்து கிடைப்பது. பொதுவாகவே இது அழகுக்காகவே வளர்க்கப்படுகிறது. இதை கிராமப் பகுதிகளில் இட்லிப்பூ என்றும் சொல்கிறார்கள். இந்த வெட்சிப்பூவின் இலைகளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. இது பெண்களின் பிரச்னையான வெள்ளைப்போக்கு, வயிற்றுப் போக்கையும் நீக்கும்.

இதேபோல் நெஞ்சுசளியை கரைத்து விடும் ஆற்றலும் இதற்கு உண்டு. ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். இதன் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோயும் தீரும்.

சிலருக்கு எப்போதும் உடல் சோர்வு இருக்கும். ஆங்கிலத்தில் டயர்ட் என சொல்வார்களே அதே நிலை. சோர்வு, காய்ச்சலையும் இந்த பூ நீக்கிவிடும்.

காய்ச்சல் குணமாக ...ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வெட்சிப்பூவைப் போட வேண்டும். அதோடு கொஞ்சம் பனங்கற்கண்டையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தினமும் காலை, மாலையில் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகிவிடும். இதேபோல் கழிச்சல் பிரச்னை இருந்தாலும் இதைக் குடிக்க போய்விடும்.

இந்த வெட்சிப்பூ உடல் சூட்டையும் தணித்து, வியர்வையைத் தூண்டும். வலியோடு வரும் மாதவிடாய், முறைதவறி வரும் மாதவிடாய், வெள்ளைப்போக்குக்கும் இது மருந்தாகும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ‘’வெட்சிப்பூவை பசை போன்று அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மோரில் கலந்து தினசரி காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வெள்ளைப்போக்கு பிரச்னை தீர்த்துவிடும். கருப்பையில் ஏற்படும் புண்ணை ஆற்றுவதுடன், புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

இதேபோல் தேங்காய் எண்ணெய், நீர்விடாமல் அரைத்த வெட்சிப்பூ ஆகியவற்றை சேர்த்து தைலம் போல் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி பூசினால் தோல்நோய் பிரச்னை தீரும். இதேபோல் முருங்கை பட்டையை சிதைத்து கொஞ்சம் கடுகு சேர்த்து கலந்து பூசிவந்தால் மூட்டுவலி போகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெட்சி பூவை இனி மிஸ் பண்ணிடாதீங்க...உள்ளூர் நாட்டுமருந்து கடைகளில் வெட்சி பூ பொடியாகவும் கிடைக்கும்.


நண்பர்களுடன் பகிர :