ஆரோக்கிய உணவான மீன்...ஆபத்தாக மாறும் பயங்கரம்.. ஊசிபோட்டு சந்தைக்கு வரும் இறால்...உஷார் ரிப்போர்ட்..! Description: ஆரோக்கிய உணவான மீன்...ஆபத்தாக மாறும் பயங்கரம்.. ஊசிபோட்டு சந்தைக்கு வரும் இறால்...உஷார் ரிப்போர்ட்..!

ஆரோக்கிய உணவான மீன்...ஆபத்தாக மாறும் பயங்கரம்.. ஊசிபோட்டு சந்தைக்கு வரும் இறால்...உஷார் ரிப்போர்ட்..!


ஆரோக்கிய உணவான மீன்...ஆபத்தாக மாறும் பயங்கரம்..   ஊசிபோட்டு சந்தைக்கு வரும் இறால்...உஷார் ரிப்போர்ட்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய உணவு மீன். புரதச்சத்து நிறைந்த மீன் உணவினை சாப்பிடுவதன் மூலம் கண்பார்வை நன்றாக இருக்கும் என்பதால் சிக்கன், மட்டனை விட பலரும் மீன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் அதில் மிகப்பெரிய ஆபத்து இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

அதிலும் இறால் மீனில் தான் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இச்சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. பொதுவாகவே இறால் மீன் பிரியர்கள் அது ஆரோக்கியமாகவும், சாறு அதிகம் உள்ளதாகவும் இருக்கிறதா என பார்த்து, பார்த்து வாங்குவார்கள். அப்படி ஒரு பெண் இறால் வாங்கும் போதுதான், அப்படித் தெரிவதற்காக ஜெலட்டின் ஊசி மூலம் செலுத்தி இருப்பது தெரிய வந்தது.

அந்த பெண் வீட்டுக்கு வந்து இறாலின் தலையை உரிக்கும்போது அதில் ஜெலட்டின் நிரப்பி இருப்பது தெரியவந்தது. 2012ல் இருந்தே இறாலில் இப்படி ஜெலட்டின் கலப்படம் செய்து விற்பது சீனாவில் ஆங்காங்கே நடந்து வருகிறது. இறால் பருமனாகவும், பார்த்தவுடன் வாங்கத் தூண்டவும் இப்படி செய்கிறார்கள் வியாபாரிகள். இது இறாலின் எடையையும் கூட்டுவதால் வியாபாரிகள் லாபக்கணக்கு போடுகின்றனர். அதேநேரம் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஜெலட்டினை நிரப்பி ஆரோக்கியமான மீனை...ஆபத்தான உணவாக மாற்றி வருகிறது சீனா.

இந்தியா இப்போதே இதில் விழித்துக் கொள்ள வேண்டும். அப்புறம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் போல, இந்த தில்லாலங்கடியையும் நம்ம ஊருக்காரங்க இறக்குமதி செஞ்சுடுவாங்களே!


நண்பர்களுடன் பகிர :