ஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்! Description: ஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்!

ஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்!


ஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது உண்டு. அந்த மரணத்துக்கு பின்பு வாழ்ந்த மனிதர்களை அவர்களது வம்சா வழியினர் அடக்கம் செய்து, அவர்களை தெய்வமாக நினைத்து வழங்குவதும் மரபு. அதேநேரம் சித்தர்களைப் பொறுத்தவரை ஜீவசமாதி அடைகின்றனர். இவர்கள் தெய்வமாக நின்று அருள்வார்கள் என்பது நம்பிக்கை.

அப்படித்தான் திருச்சியில் ஒரு பெண்ணின் ஜீவசமாதி இருக்கிறது. அது குறித்து இப்போது பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திருச்சி விமானநிலையத்தின் அருகே உள்ள அன்னை ஆசிரமம் பக்கத்தில் இருக்கும் மயானக்கரையில் இருக்கிறது வேதவள்ளி அம்மாவின் ஜீவசமாதி.

யார் இந்த வேதவள்ளி? திருச்சி ஸ்ரீனிவாசனின் மனைவி தான் வேதவள்ளி. ஸ்ரீனிவாசனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அவரது சமாதியின் அருகிலேயே வேதவள்ளியையும் அடக்கம் செய்தனர் அவரது உறவுக்காரர்கள். வேதவள்ளி குழந்தைப் பருவத்திலேயே சிவானந்த பரமஹம்சரின் மடியில் வளர்ந்தவர். வேதவள்ளியின் இறப்பு நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில், அவரை அடக்கம் செய்திருந்த இடம் லேசாக சேதம் அடைந்திருந்தது.

அதை சரி செய்யப் போன போது வேதவள்ளி இறப்பின் போது எப்படி இருந்தாரோ அதேபோலவே இப்போதும் இருப்பது தெரிய வந்தது. அவர் உடலில் பூச்சி, புழுக்கள் அரிக்காமலும் எந்த சேதமும் ஆகாமல் அப்படியே இருந்தது. மேலும் வேதவள்ளி இறக்கும்போதே அவரது தலைமுடி முழுவதும் நரைத்து இருந்திருந்தது. ஆனால் இப்போது பார்த்தபோது தலைமுடி கரு,கருவென இருந்தது.இதைப் பார்த்து வேதவள்ளி அம்மாவுக்கு மீண்டும் அவரது உறவுகளும், ஆன்மீக அன்பர்களும் சேர்ந்து ஜீவசமாதி எழுப்புகின்றனர்.

வீடீயோவைப் பாருங்கள்...ஜீவசமாதி ஆச்சர்யத்தை உணர்வீர்கள்...


நண்பர்களுடன் பகிர :