தயிருக்கும், இந்த பழத்துக்கும் ஆகாது... தெரியாம தொட்டாலும் சங்கு தான்! உஷார் ரிப்போர்ட்...! Description: தயிருக்கும், இந்த பழத்துக்கும் ஆகாது... தெரியாம தொட்டாலும் சங்கு தான்! உஷார் ரிப்போர்ட்...!

தயிருக்கும், இந்த பழத்துக்கும் ஆகாது... தெரியாம தொட்டாலும் சங்கு தான்! உஷார் ரிப்போர்ட்...!


தயிருக்கும், இந்த பழத்துக்கும் ஆகாது... தெரியாம தொட்டாலும் சங்கு தான்! உஷார் ரிப்போர்ட்...!

எனக்கும், அவருக்கும் ஆகவே ஆகாதுன்னு மனிதர்களுக்குள் நாம் சிலரைச் சொல்லுவோம். அது சுபாவம், குணாதிசியத்தின் அடிப்படையில் அமைவது. அதேபோல் தயிருக்கும், ஒரு பழத்துக்கும் ஆகவே ஆகாது. மீறி அதைத்தொட்டால் சங்குதான்! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

அது தான் பலாப்பழம். முக்கனிகள் எனச் சொல்லப்படும் மா, பலா, வாழையில் இருந்தே தமிழர் மரபில் பலாப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். பலா பழம் சுவையும், சத்தும்மிக்கது தான். ஆனால் அதை தயிரோடு மட்டும் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஆயுர்வேதம் இது இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் கடும் விளைவு ஏற்படும் எனவும் எச்சரிக்கிறது.

ஆயுர்வேதக் கூற்றுப்படி, பலாப்பழத்தையும், தயிரையும் சேர்த்து சாப்பிடும்போது இரண்டிலும் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஒன்றுடன், ஒன்று கலந்து சில பிரச்னைகளை ஏற்படுத்தும். இது சாதாரண ஒவ்வாமையில் துவங்கி மரணம் வரை விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். இப்படிச் சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஏற்படுகிறது. ஏன் சிலருக்கு சருமப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

ஆனால் சமீபத்தியில் விஞ்ஞானிகளின் ஆய்வில், பலாவையும், தயிரையும் சம அளவில் சாப்பிட்டால் சிக்கல் இல்லை. தரம் உயரும் என்றும் கணித்துள்ளது. இந்த அளவுமுறை சிக்கலுக்குள் எல்லாம் சிக்காமல் நாக்கை தயிரைத் தனியாகவும், பலாவைத் தனியாகவும் வேறு வேறு நாள்களில் ருசிக்க அனுபதிக்கலாமே!


நண்பர்களுடன் பகிர :