இளைஞனின் காதுக்குள் கூடுகட்டிய சிலந்தி... ஆச்சர்ய வீடீயோ! Description: இளைஞனின் காதுக்குள் கூடுகட்டிய சிலந்தி... ஆச்சர்ய வீடீயோ!

இளைஞனின் காதுக்குள் கூடுகட்டிய சிலந்தி... ஆச்சர்ய வீடீயோ!


இளைஞனின் காதுக்குள் கூடுகட்டிய சிலந்தி... ஆச்சர்ய வீடீயோ!

17 முறை தோற்ற கஜினி முகமது, சிலந்தியை பார்த்து போராடி 18வது முறையாக வென்றதை நாம் வரலாற்றுப் பாடத்தில் படித்திருப்போம். இங்கேயும் அதேபோல் ஒரு சிலந்தி சமாச்சாரம் தான். ஆனால் இந்த சிலந்தி என்ன செய்தது தெரியுமா? மனிதனின் காதுக்குள் போய் கூடி கட்டி விட்டது. இதைக் கேட்டதும் ஆச்சர்யமாக இருக்கிறதா தொடர்ந்து படியுங்கள்...

கிழக்கு சீனாவில் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த லீ என்ற இளைஞர் கடந்த சில தினங்களாகவே கடுமையான காதுவலியினால் அவதிப்பட்டு இருக்கிறார். வலியோடு சேர்த்து அவர் காதுக்குள் ஏதோ ஊர்வது போலவும் அவருகு இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து யாங்ச்சோவில் உள்ள மருத்துவமனைக்குப் போய் டாக்டரை சிகிட்சைக்காக சந்தித்திருக்கிறார்.

அவர் காதை கைரோஸ்கோபி கருவி மூலம் ஆய்வு செய்த டாக்டர் அதிர்ந்து போனார். அவர் இரவு படித்திருக்கும் போது அவரது காது துவாரத்தின் வழியே உள்ளே சென்ற சிலந்தி ஒன்று, அங்கேயே கூடுகட்டி வசிக்கவும் செய்யத் துவங்கியுள்ளது. இவர் உடனே டாக்டரை பார்த்துவிட்டதால் செவித்திறன் தப்பியது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் அவரது மற்றொரு காதின் வழியாக சூடு கலந்த உப்பு நீரை ஊற்ற அது மறு காதுக்கு வந்ததும், சிலந்தியும் வெளியே ஓடி வந்தது.

வீடீயோவைப் பாருங்கள்...அடடா எதுக்கெல்லாம் உஷாரா இருக்க வேண்டி இருக்கு பாருங்க...


நண்பர்களுடன் பகிர :