காயம் மறைத்து...வலி கடந்து...80 ரன்களை விளாசிய வாட்சன் தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசையை முறுக்கவைத்த சி.எஸ்.கே.. வீடியோ இணைப்பு..! Description: காயம் மறைத்து...வலி கடந்து...80 ரன்களை விளாசிய வாட்சன் தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசையை முறுக்கவைத்த சி.எஸ்.கே.. வீடியோ இணைப்பு..!

காயம் மறைத்து...வலி கடந்து...80 ரன்களை விளாசிய வாட்சன் தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசையை முறுக்கவைத்த சி.எஸ்.கே.. வீடியோ இணைப்பு..!


காயம் மறைத்து...வலி கடந்து...80 ரன்களை விளாசிய வாட்சன் தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசையை முறுக்கவைத்த சி.எஸ்.கே.. வீடியோ இணைப்பு..!

இப்போது வாட்சனின் படங்கள் சோசியல் மீடீயாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரது காலில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதை இப்போது தான் கவனிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். தன் அணி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்த்துவிடக் கூடாதென காயம் மறைத்து, வலியை கடந்து 80 ரன்களை விளாசித்தள்ளி ரியல் ஹீரோவாக கிரிக்கெட் பிரியர்களின் மனதில் பசக்கென்று சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார் வாட்சன்.

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்ம், மும்பை அணியும் மோதின. இதில் ஒரே ஒரு ரன் வித்யாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி, கோப்பையை வென்றது மும்பை அணி. இந்த மேட்சில் தோனி ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஆனால் அதுக்கே ஒரு பொடியன் அழுத வீடீயோவும் வைரலனாது.

இந்த மேட்சில் 59 பந்துகளில் 80 ரன்களைக் குவித்தார் வாட்சன். இதில் உச்சக்கட்ட விசயம் என்னவென்றால் வாட்சனின் காலில் அடிபட்டு ரத்தம் கசிந்துவந்த நிலையிலும் அணியின் வெற்றிக்காக அதைக்கூட வெளியில் சொல்லாமல் பேட்டிங் செய்துள்ளார் வாட்ஸன். இதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் சென்னை அணியில் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், தனது இன்ஸ்டாகிராமில் வாட்சனின் காலில் ரத்தக்கறை இருக்கும் படத்தை வெளியிட்டார்.

அது தொடர்பாக அவரே பதிவிட்டிருந்த குறிப்பில், ரன் ஓடும்போது டைவ் அடித்ததில் வாட்சனுக்கு காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதை அவர் யாரிடமும் சொல்லாமல் ஆடினார். போட்டியெல்லாம் முடிந்த பின்பு ஆறு தையல்கள் போடப்பட்டது.”எனவும் எழுத, அதன் பின்பே இவ்விவகாரம் வெளியே தெரிந்தது.

இப்போது இந்த ஐ.பி.எல் தொடரின் நிஜ ஹீரோ என்றும், ஆர்மி மேன் என்றும் சி.எஸ்.கே அணி என்னும் அடையாளத்தையெல்லாம் தாண்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் பிரியர்களாலும் கொண்டாடப்படுகிறார் வாட்சன். அப்புறமென்ன, ஜெயிச்சாலும்...தோத்தாலும் மீசையை முறுக்குங்க மக்காஸ்!


நண்பர்களுடன் பகிர :