கைவிட்ட இந்தியா.... கைகொடுத்த ஐப்பான்... உலகையே திரும்பிப் பார்க்கவைத்த தமிழனின் கண்டுபிடிப்பு...! Description: கைவிட்ட இந்தியா.... கைகொடுத்த ஐப்பான்... உலகையே திரும்பிப் பார்க்கவைத்த தமிழனின் கண்டுபிடிப்பு...!

கைவிட்ட இந்தியா.... கைகொடுத்த ஐப்பான்... உலகையே திரும்பிப் பார்க்கவைத்த தமிழனின் கண்டுபிடிப்பு...!


   கைவிட்ட இந்தியா.... கைகொடுத்த ஐப்பான்...    உலகையே திரும்பிப் பார்க்கவைத்த  தமிழனின் கண்டுபிடிப்பு...!

தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர் தன் தனித்துவமான கண்டுபிடிப்பினால் உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். அதிலும் அவர் இந்தியாவின் பல நிறுவனங்களை அணுகியும், அவர்கள் எல்லாம் எதுவும் செய்யாததால் ஜப்பான் அரசின் உதவியை நாடி இந்த சரித்திர கண்டுபிடிப்பு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் குமாரசாமி. பொறியாளரான இவர் இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். இந்த இயந்திரத்தின் மிகமுக்கிய சிறப்பம்சம் இது தண்ணீரில் இயங்குகிறது.

இந்த இயந்திரத்தை உருவாக்க தனக்கு பத்து ஆண்டுகள் ஆனதாகச் சொல்லும் சவுந்திரராஜன் குமாரசாமி, உலகிலேயே இதுமாதிரியான கண்டுபிடிப்புகளில் இதுவே முதன்மையானது என்கிறார். இந்தியாவில் இதை அறிமுகப்படுத்துவதே தன் வாழ்நாள் கனவாகக் கொண்டு அலைந்த இவர், இதற்கென பல நிறுவனங்களை நாட, அனைவரும் கைவிரித்துள்ளனர்.

கடைசியில் ஜப்பான் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு போனார். அவர்கள் இந்த கண்டுபிடிப்புக்கான வாய்ப்பை அளித்துள்ளனர்.

இதனால் இந்த இயந்திரம் இப்போது ஜப்பானில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. விரைவில் இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறார் இந்த கோவை பொறியாளர்!


நண்பர்களுடன் பகிர :