பித்தப்பையில் கல்லா? காரணம் முதல் தீர்வு வரை.. முழுமையாக விரட்டும் அருமையான இயற்கை மருத்துவ டிப்ஸ்..! Description: பித்தப்பையில் கல்லா? காரணம் முதல் தீர்வு வரை.. முழுமையாக விரட்டும் அருமையான இயற்கை மருத்துவ டிப்ஸ்..!

பித்தப்பையில் கல்லா? காரணம் முதல் தீர்வு வரை.. முழுமையாக விரட்டும் அருமையான இயற்கை மருத்துவ டிப்ஸ்..!


பித்தப்பையில் கல்லா? காரணம் முதல் தீர்வு வரை.. முழுமையாக விரட்டும் அருமையான இயற்கை மருத்துவ டிப்ஸ்..!

பித்தப்பையில் கல் என்பது இன்று பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை. ஆனால் பலரும் இது முற்றும் வரை தெரிந்து கொள்வதில்லை. காரணம் இதன் அறிகுறிகள் குறித்து முழுபுரிதல் இல்லாதது தான்.

மனித மொத்த உடலோடு ஒப்பிடுகையில் பித்தப்பை ஒரு சின்ன உறுப்புத்தான். உணவு செரிமானத்தில் பித்தப்பை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதை மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் தனி அறை என்றும் சொல்லலாம்.

பித்தப்பையில் எப்படி கல் உருவாகும் என்கிற கேள்வி இப்போது எழலாம். கொழுப்பு அதிகமான உணவு உண்டாலே பித்தப்பையில் கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். பித்தப்பையில் கல் இருந்தால் வலது நெஞ்சில் வலி ஏற்படும். இந்த இடத்தில் நெஞ்சு வலிக்கு இடதுபுற மார்பில் தான் வலிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேபோல் முதுகில் வலி இருக்கும். வலது தோளில் இருந்து உள்ளங்கை வரை வலி பரவும். குமட்டல், உணவுப்பாதை பிரச்னையும் ஏற்படும். வாய்வுத்தொல்லையும், அஜீரணக்கோளாறும் எட்டிப் பார்க்கும். இதெல்லாம் உணர்பவர்கள் இயற்கையான முறையிலேயே இதை விரட்ட ஒரு வழி இருக்கிறது.

எலுமிச்சை சாறை ஒரு கப் தண்ணீரில் பிழிந்து மணிக்கு ஒருமுறை குடிக்கலாம். நெருஞ்சி இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அப்படி குடித்தால் ஆறே நாளில் பித்தப்பை கல் ஓடிவிடும்.

இதேபோல் கீழாநெல்லிக்கீரையும் கல்லைக் கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பை கல்லை மட்டுமல்லாது கல்லீரல் கல், சிறுநீரகக் கல் என அனைத்தையும் கரைக்கும் தன்மை கொண்டது. சிலர் இதையெல்லாம் முயற்சிக்காமல் நேரடியாக பித்தப்பையையே முன் ஜாக்கிரதை என நீக்கி விடுவார்கள். இவர்களுக்கு அஜீரணக்கோளாறு, குடல்புண் ஆகியவை பிற்காலத்தில் வரும் வாய்ப்பு அதிகம்.

சரி இந்த கீழா நெல்லிக்கீரையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிறீர்களா? ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கீழாநெல்லிகீரையை பொடி செய்து கலக்கணும். தண்ணீர் ஆறியதும் இதை வடிகட்டி குடிக்கலாம். இதை தினசரி ஒருமுறை என ஒரு வாரம் குடித்தாலே பித்தப்பை கல் பிரச்னை தீர்ந்துவிடும்.


நண்பர்களுடன் பகிர :