துண்டான தலை... உயிர்வாழும் சேவல்! ஆச்சர்ய வீடீயோ Description: துண்டான தலை... உயிர்வாழும் சேவல்! ஆச்சர்ய வீடீயோ

துண்டான தலை... உயிர்வாழும் சேவல்! ஆச்சர்ய வீடீயோ


துண்டான தலை... உயிர்வாழும் சேவல்! ஆச்சர்ய வீடீயோ

தலை துண்டான நிலையிலும், சேவல் உயிர் வாழ்வது எல்லாம் நம்ம ஊரு விட்டாலாச்சாரியார் படங்களில் தான் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்திலேயே அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





தாய்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் அதிக அளவு நாட்டுக்கோழி வளர்ந்து வந்தார். ஒரு ஞாயிற்றுக் கிழமை அவருக்கு நல்ல கறி விருந்து சாப்பிட ஆசை வந்தது. உடனே தன்னிடம் இருந்ததிலேயே நல்ல ஒரு வெடச் சேவலைத் தேர்ந்தெடுத்து அதன் கழுத்தை வெட்டி தலையை துண்டாக்கினார். உடனே அந்த சேவல் உயிரை விட துடித்துக் கொண்டிருந்தது. அந்த கேப்பில் சேவலைகழுவ தண்ணீர் எடுத்து வருவோம் என உள்ளே சென்றவர் திரும்பி வந்து பார்த்த போது அதிர்ந்து போனார்.





காரணம், தலைதுண்டான நிலையிலும் அந்த சேவல் சாகவில்லை. ரொம்பவே இயல்பாக நின்றது. உடனே இது ஆச்சர்ய சேவல் தான் என முடிவெடுத்தவர், ஊசி மூலம் நரம்பின் ஊடே அதற்கு உண்வைச் செலுத்தி ஒரு வாரமாக வளர்த்துள்ளார். அதன் பின்னரே அது இறந்து போனது. இந்த ஆச்சர்யத்தை அவர் தனது செல்போனில் வீடீயோவாக எடுத்து பதிவிட அது இப்போது வைரலாகி வருகிறது.





இது ஏதோ கண்கட்டி வித்தை என நெட்டிசன்களில் சிலர் வறுத்தெடுக்க...வாய் என்ன ஒரு ஆச்சர்யம் என சிலர் புளங்காகிதம் அடைகின்றனர். வீடீயோ பாருங்க..உங்க கருத்தையும் சொல்லுங்க...


நண்பர்களுடன் பகிர :