உயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..! Description: உயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..!

உயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல் உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..!


உயிர் இழந்த மகனை நினைத்து புலம்பியவருக்கு டிக்டாக் கொடுத்த ஆறுதல்   உருகும் தந்தையின் பாசப் போராட்டம்..!

பெற்றவர்களுக்கு குழந்தைகள் என்பது பெரும் வரம். அதிலும் பிள்ளைகள் தான் பெற்றோருக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டும். அதேநேரம் பிள்ளைகளுக்கு பெற்றோர் ஈமச்சடங்கு செய்ய வேண்டி வந்தால் அவர்கள் அடையும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்கவே ,முடியாது.

அப்படி தன் மகனை இழந்த ஒரு தந்தைக்கு டிக் டாக் மிகப்பெரிய ஆறுதல் கொடுத்துள்ளது.

இங்கும் அப்படித்தான் கார்த்திகேயன் என்னும் சிறுவன் தனது குழந்தை பருவத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துவிட்டான். அவனது இறப்பை அவனது தந்தையால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. சதா சர்வநேரமும் கார்த்திகேயனின் நினைப்பிலேயே மிதந்து வந்தார் அந்த தந்தை. ஆம்..2009ம் ஆண்டில் பிறந்த கார்த்திகேயன் தன் பதின் பருவத்தை எட்டும் முன்பே பரிதாபமாக உயிர் இழந்து விட்டான்.

இந்நிலையில் பாசம் வைச்சாலும்...என்னும் பாடல் வரிகளை வைத்து ஒருசிறுவன் டிக்டாக் வீடீயோ வெளியிட்டு இருந்ததைப் பார்த்தார் கார்த்திகேயனின் தந்தை. அந்த பாடலுக்கு ஆடும் சிறுவனின் முகச்சாயல் தன் மகன் கார்த்திகேயன் போலவே இருக்க, அதை பார்த்து பூரித்த கார்த்திகேயனின் தந்தை இதை வைத்து ஒரு டிக் டாக் வீடீயோ வெளியிட்டுள்ளார். அதில் இறந்து போன தன் பையனின் புகைப்படத்தைக் காண்பித்து, இப்போது ஆடும் சிறுவனைக் காட்டி அவனுக்கு முத்தமிட முயல்கிறார்.

மேலும் தன் மகன் சாகவில்லை என உருக்கமாக பதிவு போட்டுள்ளார். இதுபோன்ற நல்லுலங்களின் ஆறுதலுக்கேனும் டிக்டாக்கிற்கு தடைவிதிக்கக் கூடாதென பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்..

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :