லட்சக்கணக்காணோரை ஈர்த்த வயோதிகரின் குரல்... இளைய தளபதி ரசிகர்கள் கொண்டாடும் முதியவர்...! Description: லட்சக்கணக்காணோரை ஈர்த்த வயோதிகரின் குரல்... இளைய தளபதி ரசிகர்கள் கொண்டாடும் முதியவர்...!

லட்சக்கணக்காணோரை ஈர்த்த வயோதிகரின் குரல்... இளைய தளபதி ரசிகர்கள் கொண்டாடும் முதியவர்...!


லட்சக்கணக்காணோரை ஈர்த்த வயோதிகரின் குரல்...    இளைய தளபதி ரசிகர்கள் கொண்டாடும் முதியவர்...!

இசையை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இசையை பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் தமிழ் பாடல்களுக்கு, கேரளத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் படை இருக்கிறது. அந்த வகையில் இளைய தளபதி விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் பாடலை முதியவர் ஒருவர் சாலையோரம் நின்று பாட, அது இப்போது கேரளத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்த தொழிலாளி ராகேஷ் உன்னி தன் ஓய்வு நேரத்தில் உன்னைக் காணாமல் நானும் நான் இல்லையே என விஸ்வரூபம் படப்பாடலை பாடிய வீடோயோ வைரலானது. ராகேஷ் உன்னி தன் வேலைக்கு இடையே சும்மா பொழுதுபோக்கிறாக பாடிய அந்த பாடல் செம வைரலாக, கமலஹாசனே ராகேஷ் உன்னியை நேரில் அழைத்து பாராட்டினார்.

இதேபோல் தமிழ்ப்பெண் வைஷ்ணவி, மலையாளத்தில் தீவண்டி படத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடியதும் ஹிட் அடித்தது. இப்போது அந்த வரிசையில் முதியவர் ஒருவரும் சேர்ந்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்த முதியவர், விஜய் நடித்து சக்கைபோடு போட்ட துள்ளாத மனமும் துள்ளும் படத்தில்வரும், ‘’இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு’’ பாடலை பாடி அசத்தினார். அவர் சாலையோர பாட்டு பாடும் சின்னக் கலைஞர். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அந்த பாவப்பட்ட, வயோதிகரின் திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :