கொட்டும் மழையில் தீப்பற்றி எரிந்த பனை..! Description: கொட்டும் மழையில் தீப்பற்றி எரிந்த பனை..!

கொட்டும் மழையில் தீப்பற்றி எரிந்த பனை..!


கொட்டும் மழையில் தீப்பற்றி எரிந்த பனை..!

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் திருப்பூர், ஈரோடு, சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சிலதினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையிலும் பனை மரம் ஒன்று பற்றி எரிந்த சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அங்கு நின்ற ஒரு பனை மரத்தில் மின்னல் தாக்கியது. இதில் அந்த பனை மரம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.

இதுகுறித்து அந்த பகுதிவாசிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதேநேரம் மழையும் பெய்ததால், சிறிதுநேரத்தில் பனையில் பற்றி எரிந்த நெருப்பு அணைந்தது. சூறைக்காற்றின் வேகத்தில் பனை மரம் திபு, திபுவென எரியும் வீடீயோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :