இந்த அஞ்சு ராசகாரங்களையும் மிஸ் பண்ணாதீங்க... இவுங்களோட இருந்தாலே டைம்பாஸ், சிரிப்பு பிச்சுக்கும்...! Description: இந்த அஞ்சு ராசகாரங்களையும் மிஸ் பண்ணாதீங்க... இவுங்களோட இருந்தாலே டைம்பாஸ், சிரிப்பு பிச்சுக்கும்...!

இந்த அஞ்சு ராசகாரங்களையும் மிஸ் பண்ணாதீங்க... இவுங்களோட இருந்தாலே டைம்பாஸ், சிரிப்பு பிச்சுக்கும்...!


இந்த அஞ்சு ராசகாரங்களையும் மிஸ் பண்ணாதீங்க... இவுங்களோட இருந்தாலே டைம்பாஸ், சிரிப்பு பிச்சுக்கும்...!

மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு. சிலர் சின்ன சின்ன விசயங்களையும் பெரிதாக எடுத்துக் கொண்டு மனதுக்குள் போர் நடத்திக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர், எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அசால்டாக ஊதித்தள்ளி விடுவார்கள். எந்த ஒரு பிரச்னையையும் அலட்டிக் கொள்ளாமல், சிரிப்பையே பிரதானமாக்கி செய்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

ஆனால் அது எத்தனை பேருக்கு சாத்தியம் என்று தெரியாது. ஆனால் இந்த அஞ்சு ராசிக்காரர்களோடு இருந்தால் எந்த கவலையையும் மறந்து சிரிக்க முடியும். டைம்பாஸ் சும்மா பிச்சுகிட்டு போகும். அதுகுறித்து தெரிஞ்சுக்க தொடர்ந்து படியுங்கள்..

மிதுன ராசிக்கு அதில் முதல் இடம்...இவர்களிடம் மேதாவித்தனமான விசயங்கள் முதல், விளையாட்டு கடி ஜோக்குகள் வரை இவர்களின் பெட்டகத்தில் இருக்கும். எந்த சூழலையும் இவர்களால் இதனால் கலகலப்பாக மாற்ற முடியும். இவர்களை சுற்றி எப்போதுமே நண்பர்கள் படை இருக்கும். காரணம் இவர்களின் பேச்சு அத்தனை சுவாரஸ்யமானது. எவரையும் எளிதில் சிரிக்க வைக்கும் இவர்கள், ஒவ்வொரு விசயத்தையும் யாரும் எதிர்பார்க்காத கோணத்திலும் சொல்லக் கூடியவர்கள்.

கடகம்...

ஒரு சாதாரண விசயத்தையும் நகைச்சுவையோடு அணுகும் இவர்கள் சிரிக்க வைப்பதோடு, அனுபவித்து சிரிப்பவர்கள். நாம் கவனிக்க ,மறந்த விசயங்களையும் கூட கவனித்து அதில் நகைச்சுவை செய்வது இவர்களின் சிறப்பு. இவர்களோடு ஊர் சுற்றுவதே ஜால்கியான காமெடி படத்துக்கு செல்வது போல் இருக்கும்.

கும்பம்..

ஒரு ஜோக் சொல்லி மற்றவர்கள் வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அலட்டியே கொள்ளாமல் கேஷ்வலாக இருப்பவர்கள் இவர்கள். அனைத்து சூழலையும் நகைச்சுவையாகவே பார்க்கும் இவர்கள், மற்றவர்களையும் அப்படியே சொல்ல செயல்பட வைப்பர். இவர்களது புத்திசாலித்தனத்துடன் கூடிய வேடிக்கை நிகழ்வு ரசிக்க வைக்கும்.

தனுசு..

ஒரு சாதாரண நிகழ்வைக் கூட நகைச்சுவை ததும்ப மிக சுவாரஸ்யமாக கூறுவது இவர்களின் பலம். இவர்கள் மற்றவர்களை சிரிக்க வைக்க அவ்வப்போது குட்டி, குட்டி சுவாரஸ்ய பொய்களும் சொல்வார்கள். மற்றவர்கள் முன்பு இதனால் ஜோக்கராகவே இவர்கள் தெரிந்தாலும், நிஜத்தில் அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் ஹீரோ இவர்கள்.

விருச்சிகம்..

இவர்களது நகைச்சுவைத்திறன் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். மிகக்கடினமான சூழ்நிலையையும் கூட இவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள். கேலி, கிண்டல் செய்வதில் வல்லவர்களான இவர்களை பார்த்தால் அப்படி தெரியவே செய்யாது.

ஆக..இந்த அஞ்சு ராசிக்காரர்களோடும் நம்பி ட்ரிப் போங்க...ஜாலியா சிரிச்சுட்டே வருவீங்க!...


நண்பர்களுடன் பகிர :