பறவைகள் மீது பாசம்...மின்சாரம் இல்லாத வீடு... 2.0 பட பாணியில் நிஜமாகவே வாழும் ஒரு பெண் பேராசிரியர்..! Description: பறவைகள் மீது பாசம்...மின்சாரம் இல்லாத வீடு... 2.0 பட பாணியில் நிஜமாகவே வாழும் ஒரு பெண் பேராசிரியர்..!

பறவைகள் மீது பாசம்...மின்சாரம் இல்லாத வீடு... 2.0 பட பாணியில் நிஜமாகவே வாழும் ஒரு பெண் பேராசிரியர்..!


பறவைகள் மீது பாசம்...மின்சாரம் இல்லாத வீடு...  2.0 பட பாணியில் நிஜமாகவே வாழும் ஒரு பெண் பேராசிரியர்..!

இரண்டு நிமிடம் கரண்ட் கட் ஆனால் கூட, அய்யோ...எப்போ கரண்ட் வருமோ? என நாம் காத்துக் கிடக்கும் இன்றைய சூழலில் ஓய்வுபெற்ற ஒரு கல்லூரி பேராசிரியை மின்சாரம் கூட இல்லாத வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தைப் போல பறவைகள் மீது பாசம் கொண்ட மனிதராகவும் அவர் வாழ்ந்து வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியில் உள்ள புத்வர் பெத் என்னும் சிறுபகுதியில் ஹோமா ஷனே வசித்து வருகிறார். 79 வயதாகும் இவர் புனேவில் உள்ள கர்பானே கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது முனைவர் என சொல்லப்படும் டாக்டர் பட்டத்தை சாவித்ரிபாய் முலே பல்கலைக்கழத்தில் படித்தார்.

துவக்கத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹோமா ஷனே வீட்டில் மின்சாரம் இருக்கவில்லை. ஒருகட்டத்தில் பேராசிரியராகி வசதியான வாழ்க்கை வந்தபோதும் கூட அவர் தன் வீட்டில் மின்சாரத்தை வைத்துக்கொள்ள வில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்பவர்களிடமும், ‘’உஅவு, உடை, உறைவிடம் இது மூன்று தான் அடிப்படை தேவை. மின்சாரம் இந்த லிஸ்டில் இல்லை. அது இல்லாமலும் என்னால் வாழ முடியும். முடிந்திருக்கிறதே...”என்கிறார்.

இதை விட ஒருபடி மேலே சொன்னால் 2.0 படத்தில் பட்ஷிராஜன் பாத்திரம்போல், தான் வசிக்கும் வீடு, தன் வீட்டில் வளர்த்துவரும் செல்லப் பிராணிகளுக்கும், பறவைகளுக்குமே சொந்தம் என்கிறார். உங்கள் பாதையை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்னும் புத்தரின் பொன்மொழிக்கேற்ப வாழும் இந்த ஓய்வுபெற்ற பேராசிரியையை நிஜ பட்ஷிராஜன் என்றே சொல்லலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :