கேட்சை கோட்டை விட்ட முரளி விஜய்.. கடுப்பான தல டோனி - வைரலாகும் வீடியோ Description: கேட்சை கோட்டை விட்ட முரளி விஜய்.. கடுப்பான தல டோனி - வைரலாகும் வீடியோ

கேட்சை கோட்டை விட்ட முரளி விஜய்.. கடுப்பான தல டோனி - வைரலாகும் வீடியோ


கேட்சை கோட்டை விட்ட முரளி விஜய்..  கடுப்பான தல டோனி - வைரலாகும் வீடியோ

ஐபிஎல் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றது. நேற்று நடந்த மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முக்கிய விக்கெட்டான சூர்யா குமாரின் கேட்சை பிடிக்க தவறிய முரளி விஜயின் மீது தல டோனி கடுப்பானார். தற்போது அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

ஐபிஎல் லில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தகுதி சுற்று போட்டியின் முதல் ஆட்டம் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்று களம் இறங்கிய சென்னை அணி , 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும் அதற்க்கு அடுத்த படியாக டோனி 37 ரன்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் களம் இறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் முடிவில் 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியின் சூர்யக்குமார் யாதவ் 71 ரன்கள் எடுத்து அணியினை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார்.

இதில் சூரியகுமார் யாதவ் 5 வது ஓவரை எதிர்கொண்டபோது முரளி விஜய் அவரது கேட்சை தவறவிட்டார், அப்போது தல டோனி கடுப்பானார். இந்த கேட்சே மும்பை அணியின் திருப்பு முனையாக அமைந்தது.


நண்பர்களுடன் பகிர :