இது சுடுகாடு இல்ல... ஆஸ்பத்திரி! இவர்கள் பிரேதங்கள் அல்ல...சிகிட்சைக்கு வந்த நோயாளிகள்..! Description: இது சுடுகாடு இல்ல... ஆஸ்பத்திரி! இவர்கள் பிரேதங்கள் அல்ல...சிகிட்சைக்கு வந்த நோயாளிகள்..!

இது சுடுகாடு இல்ல... ஆஸ்பத்திரி! இவர்கள் பிரேதங்கள் அல்ல...சிகிட்சைக்கு வந்த நோயாளிகள்..!


இது சுடுகாடு இல்ல... ஆஸ்பத்திரி!    இவர்கள் பிரேதங்கள் அல்ல...சிகிட்சைக்கு வந்த நோயாளிகள்..!

ஒரு கொட்டகை போன்ற அமைப்பு. நடுவிலே குண்டு வெட்டி ஆள்களை கிடத்துகிறார்கள். அவர்களை கிடத்திய பின்பு ஒரே புகை மண்டலமாக வருகிறது. இதை பார்த்தவுடன் நாம் சுடுகாடு என்று தான் நினைப்போம். ஆனால் அது ஒரு வைத்தியசாலை!

திருச்சி அருகில் உள்ள மணப்பாறையில் இந்த மன்னர் காலத்து மூலிகை புகை சிகிட்சை இன்னும் கூட வழக்கத்தில் இருக்கிறது. அமாவாசை, பொளர்ணமி நாள்களில் இந்த சிகிட்சையை மக்கள் ஆர்வத்துடன் செய்கின்றனர். மணப்பாறையை அடுத்த அழககவுண்டம்பட்டியில் வசிக்கும் பழனிச்சாமி என்னும் விவசாயி தான் இந்த சிகிட்சையை செய்கிறார்.

இவரது குடும்பத்தினர் கடந்த 6 தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு பழனிச்சாமி கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. சிகிட்சைக்கு வரும் நோயாளிகள் விருப்பப்பட்டு கொடுக்கும் தொகையி வாங்கிக் கொள்கிறார். அந்த பணத்திலேயே அவர் வணங்கும் முருகனுக்கு பங்குனி மாதத்தில் விழா எடுத்து அன்னதானம் கொடுக்கிறார்.

தனியொரு கொட்டகை அமைத்து அதில் ஒரேநேரத்தில் இருவர் சிகிட்சை பெறும் அளவுக்கு குழிவெட்டி, காற்றின் மூலம் புகையைக் கொண்டு செல்லும் கையால் சுழற்றும் கருவியை பயன்படுத்தி இரு மண்பாண்டங்களின் வழியாக அந்த குழிக்கு புகை செல்லும். குழிக்குள் மூலிகை செலுத்தி செய்யப்படும் இந்த சிகிட்சை குறைந்தது 10 நிமிடம் முதல், அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை நடக்கும். இந்த சிகிட்சையினை நான்கைந்து முறை எடுத்தால் வெண் குஷ்டம் தொடங்கி, பெண்களுக்கான உடல்ரீதியான பிரச்னைகள் வரை ஓடிவிடும்.

கோடை வெயில் வாட்டி எடுக்க, மூலிகை கிடைப்பதே சிரமமாக உள்ள நிலையில் 6 தலைமுறைகளாக இந்த எளிய மனிதர் செய்யும் சேவையை பாராட்டலாமே?


நண்பர்களுடன் பகிர :