வெளிநாட்டில் பெர்த்டே கொண்டாடிய ராஜலட்சுமி... சின்னமச்சான் பாடகிக்கு குவியும் வாழ்த்துகள்..! Description: வெளிநாட்டில் பெர்த்டே கொண்டாடிய ராஜலட்சுமி... சின்னமச்சான் பாடகிக்கு குவியும் வாழ்த்துகள்..!

வெளிநாட்டில் பெர்த்டே கொண்டாடிய ராஜலட்சுமி... சின்னமச்சான் பாடகிக்கு குவியும் வாழ்த்துகள்..!


வெளிநாட்டில் பெர்த்டே கொண்டாடிய ராஜலட்சுமி...   சின்னமச்சான் பாடகிக்கு குவியும் வாழ்த்துகள்..!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பேமஸ் ஆன ஜோடி தான் செந்தில் கணேஷ்_ராஜலெட்சுமி!

நாட்டுப்புறப் பாடல்களை பாடி, அதற்கான அடையாளத்தையும் உருவாக்கிய பெருமை இந்த ஜோடியை சேரும். அதன் பின்னர் இந்த ஜோடி தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவையும் கடந்து உலக அளவில் போய் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர். சில விளம்பரங்களிலும் கூட இந்த ஜோடி தலைகாட்டியது.

பிரபுதேவா நடித்து ஷக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் 2 படத்திலும், இவர்கள் ‘’சின்ன மச்சான்...சொல்லு பிள்ளை’’ பாடல் இடம் பெற்றது.

இப்போது ஒரு இசை நிகழ்ச்சிக்காக செந்தில் கணேஷ்_ராஜலெட்சுமி தம்பதியினர் ஆஸ்திரேலியா போய் இருக்கின்றனர். அப்போது அங்கு வைத்தே ராஜலெட்சுமி தனது பிறந்தநாளை கணவர் மற்றும் குழுவினர் முன்னால் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இதுகுறித்து வீடீயோ வெளியிட அது சமூகவளைதலங்களில் டிரெண்டாகி வருகிறது. அதில் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :