மகளால் இணையத்தில் ட்ரெண்டான நடிகர் கொட்டாச்சி.. மனைவி, மகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசுகிறார்..! Description: மகளால் இணையத்தில் ட்ரெண்டான நடிகர் கொட்டாச்சி.. மனைவி, மகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசுகிறார்..!

மகளால் இணையத்தில் ட்ரெண்டான நடிகர் கொட்டாச்சி.. மனைவி, மகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசுகிறார்..!


மகளால் இணையத்தில் ட்ரெண்டான நடிகர் கொட்டாச்சி..    மனைவி, மகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசுகிறார்..!

நடிகர் விவேக்குடன் ஜோடி சேர்ந்து பழைய படங்களில் குபீர் என சிரிப்பை வரவழைத்தவர் கொட்டாச்சி. ஆனால் அப்போதெல்லாம் ட்ரெண்டாகாத கொட்டாச்சி, இப்போது தன் மகளால் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளார்.

நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அவருடைய மகளாக ‘மானஸ்வி’ என்னும் குழந்தை நடித்ததே நினைவில் இருக்கிறதா? அந்த குழந்தையின் நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. அது நடிகர் கொட்டாச்சியின் மகள். இப்போது இதை நெகிழ்ச்சியோடு கூறுகிறார் கொட்டாச்சி.

‘’800 ரூபாய் வாடகையில் ஒரு மேன்சனில் தங்கித்தான் என் திரையுலக வாழ்வு தொடங்கியது. நடிப்பில் ஓரளவுக்கு வருமானம் வந்ததும் 2000 ரூபாய் வாடகைக்கு மாறுனேன். ஆனாலும் வாழ்க்கையில் நிறைய விசயங்கள் கல்யாணத்துப் பின்னாடி தான் நடந்துச்சு.

திருமணம் முடிஞ்சதும் 7000 ரூபாய் வாடகைக்குப் போனோம். அப்போது கூட மாசம் பிறந்தா சுளையா ஏழாயிரம் ரூபாய் எண்ணி வைக்கணுமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கும். என் செல்லப் பொண்ணு மானஸ்வி பிறந்த பின்னாடி, வாழ்க்கையும் கொஞ்சம் பாஸிட்டிவ்வா போச்சு. ஒருகட்டத்தில் 15 ஆயிரம் வாடை கொடுக்கும் அளவுக்கு வந்துட்டேன்.

மூணு வயசுலயே என் பொண்ணு நடிக்க ஆரம்பிச்சுட்டா. அவளுக்கு இப்போ ஆறு வயசு. இப்போ எங்க சொந்தவீடு கனவும் நிறைவேறி இருக்கு. இதேபோல் என் மனைவி அஞ்சலியும் டப்பிங் பேச ஆரம்பிச்சாங்க. மே மாசம் 1ம் தேதி பால்காய்ச்சேன். என் வீட்ல இருக்குற மனைவி, மகள்ன்னு இரண்டு தேவதைகளாலும் தான் சொந்த வீடு சாத்தியம் ஆயிருக்கு.”என்கிறார் கொட்டாச்சி. .


நண்பர்களுடன் பகிர :