என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... தல அஜித் ரசிகரின் அம்மாவைத் திட்டிய ஓவியா...! Description: என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... தல அஜித் ரசிகரின் அம்மாவைத் திட்டிய ஓவியா...!

என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா... தல அஜித் ரசிகரின் அம்மாவைத் திட்டிய ஓவியா...!


என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா...    தல அஜித் ரசிகரின் அம்மாவைத் திட்டிய ஓவியா...!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கே சென்றவர் நடிகை ஓவியா. அந்நிகழ்வைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமலை விட ஓவியா புகழின் உச்சத்துக்குச் சென்றார். நிகழ்ச்சிக்கு பின் திரைத்துறையில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சர்ச்சையில் பெரிய ரவுண்ட் வருகிறார் ஓவியா.

இதில் தல அஜித் ரசிகரின் அம்மாவை திட்டி ரீசண்டாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். எப்போதும் தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் கூட கண்டுகொள்ளாது கடந்து விடுவது ஓவியாவின் பலம்.

சமீபத்தில் அவர் நடித்த 90 எம்.எல் படம் விவாத மான போதும் கூட, படத்தைப் பிடித்தால் பாருங்கள். இல்லையெனில் பார்க்காதீர்கள் என கூலாக பதில் சொன்னார் ஓவியா.

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா? எனக் கேட்டார். உடனே அஜித் படத்தை புரொபைல் பிக்சராக வைத்திருந்த ஒருவர் அதன் கீழ் ஐயிட்டம் என கமெண்ட் செய்தார். உடனே அதன் கீழ் கமெண்ட் செய்த ஓவியா, அவரது அம்மாவை அதில் கோர்த்துவிட்டு பதிவிட்டுள்ளார். இதில் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஓவியாவின் மேல் காண்டில் அலைய, அந்த பொண்ணு கிட்ட யாண்டே வம்பு இழுக்குற? அந்த அந்த பதிவிட்ட அஜித் ரசிகரிடமும் சில தல விசுவாசிகள் கேள்வி கேட்டு இருக்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :