மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன்? மவுனம் களைத்து உருகிய நடிகர் விஷ்ணு விஷால்..! Description: மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன்? மவுனம் களைத்து உருகிய நடிகர் விஷ்ணு விஷால்..!

மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன்? மவுனம் களைத்து உருகிய நடிகர் விஷ்ணு விஷால்..!


மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன்?   மவுனம் களைத்து உருகிய நடிகர் விஷ்ணு விஷால்..!

முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தன் வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ஸ்கோர் செய்பவர் விஷ்ணு விஷால். தன் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழுவிலேயே கவனிக்க வைத்தவர் தொடர்ந்து அதேபோல் மாறுபட்ட கதைகளையே தேர்ந்தெடுத்த வகையில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

இவர் கடந்த 2011ம் ஆண்டில் நடிகருமியக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆர்யம் என ஒரு மகனும் உள்ளார். இந்த தம்பதி கடந்த 2018ம் அண்டு சட்டப்படி விவாகரத்துப் பெற்றது. ஆனால் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என இதுவரை பொதுவெளியில் விஷ்ணு விஷால் சொன்னதே இல்லை. இப்போது பிரபல ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் இதுகுறித்து பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில், ‘’நான் முதலில் ரொம்ப அமைதியாக யாரிடமும் பேசாமல் இருப்பேன். ஆனால் அதுவே திரைத்துறையில் என் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக நம்பினேன். அதனால் எல்லாரிடமும் சகஜமாக பேச ஆரம்பித்தேன். காதல் காட்சிகளில் திரைப்படத்தில் நன்றாக நடிக்க என் கூச்சம் தடையாக இருந்தது. அதனால் பெண்களிடம் சகஜமாக பேசினேன். உடனே ‘’நீ மாறிட்ட’’ன்னு பேச்சு வந்துச்சு.

அது அப்படியே நான் இந்த நபரை திருமணம் செய்யல என்னும் அளவுக்கு பேச்சு சென்றது. விவாகரத்து ஆகிவிட்டது. ஆனாலும் என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக இன்றும் எனக்கு அவரை பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான்னு எனக்குத் தெரியும். நான் ஒவ்வொரு நாளும் மனரீதியாக வருத்தத்தில் தான் இருக்கேன். ஆனால் வேலை எனது கவனத்தை திசை திருப்புகிறது. நான் என் பையனையும், அவரது அம்மாவையும் வாழ்க்கை முழுசுக்கும் ஆதரிக்கணும்ன்னு விரும்புறேன்.”என உருகியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :