தமிழன் முன்னேறாம இருக்க காரணம் இதுதான்! அமெரிக்க வீடீயோவில் கவனிக்க வைத்த ஈழப்படைப்பாளி பாஸ்கி மன்மதன்! Description: தமிழன் முன்னேறாம இருக்க காரணம் இதுதான்! அமெரிக்க வீடீயோவில் கவனிக்க வைத்த ஈழப்படைப்பாளி பாஸ்கி மன்மதன்!

தமிழன் முன்னேறாம இருக்க காரணம் இதுதான்! அமெரிக்க வீடீயோவில் கவனிக்க வைத்த ஈழப்படைப்பாளி பாஸ்கி மன்மதன்!


தமிழன் முன்னேறாம இருக்க காரணம் இதுதான்!   அமெரிக்க வீடீயோவில் கவனிக்க வைத்த ஈழப்படைப்பாளி பாஸ்கி மன்மதன்!

ஈழ மக்களுக்கு கலை உணர்வும், கலையை ரசிக்கும் பண்பும் மிக அதிகம். அவர்கள் கவனித்து, கொண்டாடும் படைப்பாளிகள் பாஸ்கி மன்மதன்! இவர் செல்பி அக்கம், பக்கம் என்னும் படைப்பின் மூலம் ஈழ மக்கள் இடையேயும், புலம் பெயர்ந்த மக்களிடையேயும் பிரசித்தி பெற்றவர். இவரும் அங்கிள் என்பவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் மிகுந்த ரசனைக்கு உரியவை.

இதில் செல்பி அக்கம் பக்கம் தொடர் இணையத்தில் செஞ்சுரி அடித்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சேம் டூ யூ என்னும் தொடரில் நடித்து வருகின்றனர். இந்த தொடரும் இதுவரை 38 வாரங்களை கடந்து வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

இப்போது இவர்கள் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் வீடீயோ செம வைரலாக போகிறது. அடுத்தவர் பிழைப்பில் ஏன் கை வைக்கிறீர்கள் என்னும் பொருளில் தமிழன் முன்னேறாமல் இருக்க என்ன காரணம்? என்னும் முக்கியப் பொருளில் இந்த குறும்படம் வந்துள்ளது.

இதில் அங்கிளும், மன்மதனும் அமெரிக்கா செல்கின்றனர். அங்கு தமிழர் ஒருவரின் தோசைக் கடையில் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதைப் பார்த்த அங்கிள் தானும், அதேபோல் அதன் எதிரேயே தோசைக்கடைப் போட வேண்டும் என துடிக்கிறார். தமிழன் முன்னேறாமல் இருக்க காரணமே இதுதான். ஒரு தமிழன் வாழ்ந்தால், இன்னொரு தமிழனுக்கு பிடிக்காது என மன்மதன் உண்மையை போட்டு உடைக்க, அது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பதிவாகவும், அதேநேரம் தமிழர்களின் மனோபாவத்தை காட்டும் பதிவாகும் வந்துள்ளது.

இந்த குறும்படத்தின் வீடீயோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


நண்பர்களுடன் பகிர :