விளையாட்டு வினையானது... பிறந்தநாள் இறந்தநாளான சோகம்...வீடீயோ பாருங்க! Description: விளையாட்டு வினையானது... பிறந்தநாள் இறந்தநாளான சோகம்...வீடீயோ பாருங்க!

விளையாட்டு வினையானது... பிறந்தநாள் இறந்தநாளான சோகம்...வீடீயோ பாருங்க!


விளையாட்டு வினையானது... பிறந்தநாள்  இறந்தநாளான சோகம்...வீடீயோ பாருங்க!

பிறந்தநாள் என்றாலே ஒரு கிரேஸ் தான். அதிலும் கல்லூரிக் காலத்தில் வரும் பிறந்தநாள்கள் வாழ்வில் மறக்கவே முடியாதவை ஆகிவிடுகிறது. ரெகுலரான ரூட் பஸ்ஸில் போகும் மாணவர்கள் பஸ்ஸிலேயே கேக் வெட்டிக் கொண்டாடுவதையும் பார்த்திருக்கிறோம். அதேபோல் இங்கு ஒரு வாலிபரின் பிறந்தநாளை நூதன முறையில் கொண்டாடப் போய், அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

நண்பருக்கு பிறந்தநாள். கேக் வாங்கி வந்தனர் அவரது சக நண்பர்கள். கேக்கை வெட்டும் முன்னர் அவருக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து, அதன் பின்னர் அணைப்பது தான் திட்டம். இதற்காக நண்பர்கள் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் நபரை கீழே பிடித்து தள்ளினர்.

அவர் தரையில் விழுந்ததும் அவரை சூழ்ந்து கொண்டு, பத்துக்கும் அதிகமான அவரது நண்பர்கள் தாக்கத் துவங்கினர். அப்போது அவரது மார்பு, வயிற்றுப் பகுதியிலும் பலத்த காயம் பட்டது. பிறந்தநாள் கொண்டாடுபவரை எழுந்திருக்க விடாதபடிக்கு, அவரை நைய்யப் புடைத்தனர்.

ஒருகட்டத்தில் மெல்ல எழுந்து வந்து கேக் வெட்ட வருகிறார். மறுநாள் தாக்குதலில் காயம் அடைந்து கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெர்த்டே பேபி, சிகிட்சை பலனின்றி இறந்து போனார். இப்படியாடா கொண்டாடுவீங்க பிறந்தநாளை என இப்போது இந்த வீடீயோ வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :