தமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்! Description: தமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்!

தமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்!


தமிழ்த்திரைப் பிரியர்களுக்கு செம கொண்டாட்டம்... விஜய், விக்ரம், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்!

விஜய் படம் வருகிறது என்றாலே கொண்டாடித் தீர்க்கும் தளபதி ரசிகர் படை பெரிது. அதேபோல் படத்துக்கு படம் எதையாவது வித்யாசமாக செய்யும் விக்ரம் படத்துக்கு விரும்பி காத்திருக்கும் கலைப் பிரியர்கள் அதிகம்.

. இதையெல்லாம் விட தனது பிரமாண்ட படைப்பினால் இந்தியத் திரையுலகின் ஜாம்பவானாக இருக்கும் ஷங்கர் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களுமே காத்திருப்பார்கள். அதேநேரம் இந்த மூவர் கூட்டணியும் இணைந்தால் அது மகா, மெகா கொண்டாட்டம் தானே?

விக்ரமோடு அந்நியன், விஜயோடு நண்பர்கள் என ஏற்கனவே தனித்தனியே ஹிட் கொடுத்த சங்கர் நிகழ்த்த இருக்கு அடுத்த பிரமாண்டம் இது. 2.0 வை உலக அளவில் ரிலீஸ் செய்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஷங்கரின் அடுத்த முயற்சி இது. இந்தியன் 2 படத்துக்காக பொள்ளாச்சியில் செட் போட்டு சூட்டிங் போய்க் கொண்டிருந்த நிலையில் தான், அரசியலில் எண்ட்ரி ஆகி, பிஸியாகி விட்டார் கமல்.

இதனால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்க, இந்த சூழலில் தான் ஏற்கனவே விஜய், விக்ரமிடம் ஓகே வாங்கி வைத்திருக்கும் கதையை சூட் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஷங்கர்.

இந்த படத்தில் விஜய், விக்ரம் என இரட்டை நாயகர்களையும் இயக்குகிறார் ஷங்கர். இந்த பிரமாண்ட அறிவிப்பு நிச்சயம் நம் கோடம்பாக்கத்து ரசிகர்களுக்கு பெரிய தீனி தானே?


நண்பர்களுடன் பகிர :