உழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா? Description: உழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா?

உழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா?


உழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா?

செந்தில்_கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், புரோட்டா சூரி என தமிழ்த்திரையுலகில் காமெடியில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அந்த வகையில் இது யோகி பாபுவின் காலம்!





யாமிருக்க பயமேன் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் வெளியாகும் படங்களில் எல்லாம் திரையரங்கில் அவர் முகம் தெரிந்தாலே, ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுகின்றனர்.





இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் சக்கைப்போடு போட்ட விஸ்வாசத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் 20 படங்கள் வந்தன. ஒருபக்கம் பக்காவான நகைச்சுவை ரோலில் நடிக்கும் யோகிபாபு, மற்றொருபுறம் பரியேறும் பெருமாள் போன்ற கலை, சமூக அக்கறை தாங்கிய படத்திலும் நாயகனுடன் படம் முழுவதும் ஜார்னி செய்திருப்பார்.





இந்நிலையில் இப்போது தர்மபிரபு என்னும் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் யோகிபாபு. தற்போது கைவசம் 19 படங்களை வைத்திருக்கும் யோகி பாபு, படத்துக்கு சம்பளம் என இல்லாமல் கால்ஷிட் கொடுக்கும் நாளுக்கு சம்பளம் வாங்குகிறார். இப்போது யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் 5 லட்சமாம்!


நண்பர்களுடன் பகிர :