இமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன? Description: இமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன?

இமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன?


இமயமலையில் உலாவரும் மர்ம உருவம்... பிண்ணனி என்ன?

நம் இந்திய நாட்டின் பாதுகாப்பு அரண்களில் முக்கியமானது இமயமலை. இதன் அமைதியை விரும்பி பலரும் பயணம் செய்கின்றனர். ஏன் தனது ஒவ்வொரு பட சூட்டிங் முடிந்தவுடனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இமயமலைக்குத்தான் செல்கிறார். இந்த இமயமலையில் மர்ம மனிதன் ஒருவன் உலாவருவது குறித்து இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

நம்மை விட இரு மடங்கு பெரிதான உடல், பார்ப்பதற்கே விகாரமான முகம், பெரிய கொம்புகளையும் வைத்துக்கொண்டு பார்க்க கரடியைப் போல அந்த மனிதனின் தோற்றம் இருக்கிறது. அதை பனிக்கரடி மனிதன் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

தோற்றத்தில் மனிதக் கரடியைப் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு ஒன்றைக் கண், பெரிதான காதும் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் அதற்கு இரு கண்கள் இருப்பதாகவும், ஆனாலும் பார்க்க அருவருப்பாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் பெயர் எட்டி எனவும் சொல்கிறார்கள். இந்த மனிதன் இமயமலையில் வசிப்பதாக நேபாளம், பூடான், திபெத் பகுதிகளில் நம்பப்படுகிறது.

மனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்றாலும், அப்படி வாழ்வோரை விரல் விட்டு எண்ணி விட முடியும். ஆனால் இந்த மர்ம மனிதனோ நூற்றாண்டு கடந்து வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆனால் இப்போது அப்படியொரு மனிதன் இமயமலையில் இல்லை எனவும், உடல் முழுக்க முடி, நீண்ட கை,கால்கள், கரடி போன்ற உருவம் கொண்ட பெரிய உருவம் முன்பு இமயமலையில் வாழ்ந்துள்ளது. இப்போது இல்லை. என ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :