செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி ஜோடியை.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நாட்டுப்புறப்பாடகர்..! Description: செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி ஜோடியை.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நாட்டுப்புறப்பாடகர்..!

செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி ஜோடியை.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நாட்டுப்புறப்பாடகர்..!


செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி ஜோடியை.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நாட்டுப்புறப்பாடகர்..!

”ஏய் சின்ன மச்சான்....சொல்லு பிள்ள” என சின்னத்திரையின் வழியாக கோடான கோடி ரசிகர்களின் உள்ளத்தில் ஊடுருவியவர்கள் செந்தில் கணேஷ்_ராஜலெட்சுமி ஜோடி! விஜய் தொலைக்காட்சியில் பாடிய இவர்கள் பட்டி,தொட்டியெங்கும் ரொம்பவே பேமஸ். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு ரசிகர் பட்டாளமும் உண்டு.

முதலில் தொலைக்காட்சியில் நாட்டுப்புறப்பாடல் பாடியதன் மூலம் அறிமுகமான இந்த ஜோடி, தொடர்ந்து விளம்பரங்கள், திரைப்படப்பாடல்கள் என தலைகாட்டத் துவங்கினர்.

இவர்களுக்கு முன்னர் நாட்டுப்புறப்பாடல் என்றாலே அது புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோரின் பெயரே பிரசித்தி பெற்று இருந்தது. இப்போது புஷ்பவனமும், அவரது மனைவியும் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கணேஷ், ராஜலெட்சுமி ஜோடியை கடுமையாக சாடி உள்ளனர்.

அதில் அவர்கள், ‘’பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம். ஆபாசம். மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறார். மேடை முழுக்க ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைச்சுக்கிட்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமா சைகை செய்றான். யூடீயூப்பில் பார்த்து நொந்து போனேன். இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்கணுமா? பாட்றதையே நிறுத்திடுவோமான்னு யோசிக்குறேன். டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடப்பது எதுவும் ரியாலிட்டி இல்லை. யாரு ஜெயிக்கணும்ன்னு முத்ல்ல முடிவு செஞ்சுட்டு தான் வெற்றி பெற வைக்குறாங்க..”என சாடியுள்ளார்.

நன்றி : BehindwoodsTV


நண்பர்களுடன் பகிர :