என்னை ஏன் தல என்று சொல்கிறார்கள்? நெகிழ்ந்து போய் பதில் சொன்ன தல தோனி...! Description: என்னை ஏன் தல என்று சொல்கிறார்கள்? நெகிழ்ந்து போய் பதில் சொன்ன தல தோனி...!

என்னை ஏன் தல என்று சொல்கிறார்கள்? நெகிழ்ந்து போய் பதில் சொன்ன தல தோனி...!


என்னை ஏன் தல என்று சொல்கிறார்கள்?   நெகிழ்ந்து போய் பதில் சொன்ன தல தோனி...!

திரையுலகில் ’தல’ என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை அது தோனி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்தில் கெத்தான ரவுடியாக வரும் அஜித்தை, அவரது கேங்கில் உள்ளவர்கள் ‘தல..தல’ என்று அழைக்க ரசிகர்களுக்கும் அது பிடித்துப்போய் அஜித்தை தல என்றே அழைக்கத் துவங்கினர்.

அதேபோல் கிரிக்கெட் உலகில் தோனியைத் தான் தல என்று அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பரான வெற்றி பெற்றது.இந்த மேட்ச் முடிந்ததும் கூட யாரும் கிளம்பி செல்லவில்லை. மொத்த ரசிகர்களும் தோனியின் பேச்சைக் கேட்க திரண்டு இருந்தனர். அவர் மேடைக்கு வந்த போதும் கூட தோனி..தோனி என கத்திக் கொண்டே இருந்தனர். தோனி அப்போது ரசிகர்கள் எப்படியும் அமைதியாகி விடுவார்கள். என் பேச்சை கேட்பார்கள் என்றார். அதேபோல் அமைதியானது கூட்டம்.

அப்போது ரசிகர்கள் ஏன் தன்னை தல என சொல்லுகிறார்கள் எனவும் விளக்கம் அளித்தார் தோனி. அதில் அவர், ‘’அது எனக்கும் தெரியல. அது ரொம்பவே ஸ்பெசல் நேமா இருக்கு. சி.எஸ்.கே முதன் முதலா ஆரம்பிச்சப்போ, ஒரு பாட்டு ஆரம்பிச்சாங்க. நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்கன்னு பாட்டு வைச்சுருந்தாங்க.

இப்போ கூட் என்னை என் பேரை சொல்லி கூப்பிடுவதை விட தல..தலன்னு தான் கூப்பிட்றாங்க. தமிழ்நாடு என்னை அவ்வளவு ஏத்துகிட்டது ரொம்ப சந்தோசமான விசயம். என்னை மட்டும் கிடையாது, என்னோட டீமையும் ரொம்ப சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டுருக்கேன்.”என சொல்லியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :