ரெய்னாவை சீண்டிய ரிஷாப் பண்ட் : வைரலாகும் சேட்டை வீடியோ Description: ரெய்னாவை சீண்டிய ரிஷாப் பண்ட் : வைரலாகும் சேட்டை வீடியோ

ரெய்னாவை சீண்டிய ரிஷாப் பண்ட் : வைரலாகும் சேட்டை வீடியோ


ரெய்னாவை சீண்டிய ரிஷாப் பண்ட் : வைரலாகும் சேட்டை வீடியோ

ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இவ்விரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. பெங்களூரு அணி மட்டும் அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது மற்ற அணிகளின் முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

இன்றய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் களம் இறங்கினர். வாட்சன் 0 ரன்னுக்கு நடையைக்கட்டினார்.

பின்னர் இறங்கிய சின்ன தல ரெய்னா நிதானமாக ஆடி 50 ரன்களை எட்டினர்.போட்டியின் இறுதிக்கட்ட ஓவர்களை டோனி எதிர் கொண்டு அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அவர் 22 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 179 ரன்களை குவித்தது.

சென்னை அணியின் சின்ன தல ரெய்னா பேட்டிங் செய்தபோது ஒரு முன்னையில் இருந்து மற்றொரு செல்ல முற்பட்டார், அப்போது ஜாலியாக குறுக்கே நின்று ரெய்னாவை போகவிடாமல் தடுத்தார். இந்த வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, இது தற்போது ரசிகர்கள் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :