படுத்தவுடன் தூங்கும் டெக்னிக்... இதை மட்டும் செய்யுங்க...சும்மா ஜம்முன்னு தூக்கம் வரும்..! Description: படுத்தவுடன் தூங்கும் டெக்னிக்... இதை மட்டும் செய்யுங்க...சும்மா ஜம்முன்னு தூக்கம் வரும்..!

படுத்தவுடன் தூங்கும் டெக்னிக்... இதை மட்டும் செய்யுங்க...சும்மா ஜம்முன்னு தூக்கம் வரும்..!


படுத்தவுடன் தூங்கும் டெக்னிக்... இதை மட்டும் செய்யுங்க...சும்மா ஜம்முன்னு தூக்கம் வரும்..!

படுத்தவுடன் தூங்குவதை வரம் என்றே சொல்லலாம். சிலர் அரைமணி நேர பேருந்து பயணத்தில் கூட குட்டித் தூக்கம் போட்டுவிடுவார்கள். ஆனால் சிலரோ நெடுந்தூர இரவு பயணத்தில் கூட உறக்கமின்றி விழித்திருப்பார்கள்.

பெரும்பாலான மனிதர்களின் ஏக்கமெல்லாம் நல்ல தூக்கமாகவே இருக்கிறது. மனிதனின் மொத்த ஆரோக்கியத்துக்கும் அடித்தளம் இடுவது நல்லதூக்கம் தான். நன்றாக தூங்க மட்டும் செய்துவிட்டால், விடிந்ததும் செய்யும் வேலையை சுறுசுறுப்பாக செய்துவிட முடியும். தூக்கத்திற்கும் கூட சில விதிகள் இருக்கிறது.

படுக்கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும்படி பலரும் படுப்பதைப் பார்த்திருப்போம். இதற்கு ஒரு காரணம் உண்டு. பொதுவாகவே நம் உடல் குளுமையாக இருக்கும்போது நல்ல தூக்கம் வரும். நம் கால்பாதங்களில் முடிகள் இல்லாததாலும், பாதத்தின் சருமம் மென்மையானது என்பதாலும், கால் பகுதி குளுமையடையும். இது நல்ல தூக்கத்தை தூண்டும். இதேபோல் கால் பாதத்தின் சருமம் வாஸ்குலர் கட்டமைப்பை கொண்டது. இது உடல்சூட்டை வேகமாக குறைக்கும்.

நாம் காய்ச்சல் நேரத்தில் தூங்க மிகவும் சிரமப்படுவோம். அதற்கு காரணம் உடலில் அப்போது வெப்பம் அதிகரிப்பதுதான்! நியூயார்க் பத்திரிகையின் ஆய்வு ஒன்று, தூங்கும்போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும்படி, வைத்துக் கொண்டால் வேகமாகவும், ஆழமான தூக்கத்துக்கு உள்ளேயும் செல்ல முடியும் என வெளியிட்டுள்ளது. கோடையில் தூக்கம் சொக்க, இரவு குளிர்ச்சியான இலகுவான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் இது போன்ற உணவுகளை குளிர்காலத்தில் எடுத்தால் சளிப் பிரச்னைகள் வரும்.

எல்லாம் ஒகே, போர்வையை மூடாமல் காலை வெளியே நீட்டி படுத்தால், குறிப்பாக பாதம் குளிரப்பட்டு தூக்கம் வருமா? இது அட்டகாசம் படத்தில் அஜித்குமார், கருணாசிடம் கண்ணாடியை திருப்பினால், ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என சொன்னது போல் இருப்பதாக சிலருக்கு தோன்றலாம். காசா? பணமா? அந்த முறைப்படி படுத்துத்தான் பாருங்களேன். தூக்கம் உங்கள் கண்களை எவ்வளவு விரைவாக தழுவிக் கொள்கிறது என அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்!


நண்பர்களுடன் பகிர :