மின்சாரம் தாக்கி இறந்த அணில் உயிர் பிழைத்த அதிசயம்… மெர்சல் விஜய் பாணியில் சிகிட்சை கொடுத்த சிறுவர்கள்..! Description: மின்சாரம் தாக்கி இறந்த அணில் உயிர் பிழைத்த அதிசயம்… மெர்சல் விஜய் பாணியில் சிகிட்சை கொடுத்த சிறுவர்கள்..!

மின்சாரம் தாக்கி இறந்த அணில் உயிர் பிழைத்த அதிசயம்… மெர்சல் விஜய் பாணியில் சிகிட்சை கொடுத்த சிறுவர்கள்..!


மின்சாரம் தாக்கி இறந்த அணில் உயிர் பிழைத்த அதிசயம்… மெர்சல் விஜய் பாணியில் சிகிட்சை கொடுத்த சிறுவர்கள்..!

இளையதளபதி விஜய் நடிப்பில் சக்கை போடு போட்ட படம் மெர்சல். அதில் ஒரு காட்சி வரும். விமானநிலையத்தில் பெண் ஒருவர் திடீரென உயிருக்கு போராடிக் கொண்டிருப்பார். அப்போது வேட்டி, சட்டை அணிந்துவரும் விஜய் அவசர,அவசரமாக முதலுதவி செய்து அந்த பெண்ணின் உயிரையே காப்பார். அப்படி ஒரு உதவியை செய்து இறந்து போன அணிலையே பிழைக்க வைத்திருக்கிறார்கள் சில சிறுவர்கள்!

காகா, குருவி போன்ற உயிரினங்கள் அவற்றின் உடல் அமைப்பினால் மின்சாரக் கம்பியிலேயே அமர்ந்தாலும் அவைகளுக்கு எதுவும் ஆகாது. ஆனால் அணில் போன்ற ஜீவராசிகளுக்கு அந்தத் தன்மை இல்லை.

இப்படித்தான் அணில் ஒன்று மின்சாரம் தாக்கி மயங்கியது. அதைப் பார்த்தாலே இறந்துவிட்டது போல் காட்சியளித்தது. பலரும் இதைப் பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டனர். ஆனால் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் அப்படி இயல்பாகக் கடந்து செல்ல முடியவில்லை.

அந்தபகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பைக்கின் சீட்டில் அதை எடுத்து வைத்தனர். அதற்கு மூச்சு இல்லாமல் அப்படியே கிடந்தது. தொடர்ந்து அந்த அணிலின் இதயப் பகுதியில் கைவைத்தும், அதன் உடல் முழுவதும் தேய்த்தும் அதற்கு உடல் சூட்டை உருவாக்கினர். சரியாக ஒரு நிமிடத்தில் செத்ததைப் போல் கிடந்த அந்த அணில் உயிர் பிழைத்து எழுந்தது. இந்த ஆச்சர்ய அணிலின் வீடீயோ இப்போது சோசியல் மீடீயாக்களில் வேகமாக பரவி வருகிறது…நீங்களும் பாருங்களேன்…


நண்பர்களுடன் பகிர :