விக்கெட் ஆனா கடுப்பில் ஸ்டெம்பை தட்டிய ரோஹித்… அபராதம் விதித்த ஐ.பி.எல்..! Description: விக்கெட் ஆனா கடுப்பில் ஸ்டெம்பை தட்டிய ரோஹித்… அபராதம் விதித்த ஐ.பி.எல்..!

விக்கெட் ஆனா கடுப்பில் ஸ்டெம்பை தட்டிய ரோஹித்… அபராதம் விதித்த ஐ.பி.எல்..!


விக்கெட் ஆனா கடுப்பில் ஸ்டெம்பை தட்டிய ரோஹித்… அபராதம் விதித்த ஐ.பி.எல்..!

கிரிக்கெட் விளையாட்டில் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும், அதற்காக அபராதம் விதிப்பதும் இப்போது வாடிக்கையாகி விட்டது. இப்போது இந்த சர்ச்சையில் லேட்டஸ்டாக சிக்கி இருப்பவர் ரோஹித் சர்மா.

மும்பை கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்று நடந்தது. இதில் ரோஹித் சர்மா, விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 232 ரன்கள் எடுத்தது. இதில் ரஸ்ஸல் 40 பந்துகளில் 80 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

வெற்றிபெற 233 ரன்கள் தேவை என்னும் இலக்கோடு ஆடத் தொடங்கியது மும்பை அணி.

ஆனால் வெறும் 198 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஹர்டிக் பாண்டியா மிகச்சிறப்பாக ஆடி குறைவான பந்துகளில் அதிக ரன் எடுத்தார்.

அதாவது 34 பந்துகளில் 91 ரன் எடுத்திருந்தார். முன்பை அணியில் அதன் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்து இருந்தபோது, எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் அவர் வெளியே செல்லும்போது ‘நான் ஸ்ட்ரைக்கர்’ முனையில் இருந்த ஸ்டெம்ப்களை பேட்டால் தட்டிச் சென்றார். இதற்காக இவரது சம்பளத்தில் இருந்து 15 சதவிகிதத்தை கட்டணமாகக் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :