பாம்புடன் சண்டையிட்டு எஜமானரை காப்பாற்றி... தன் உயிரையே விட்ட பாசக்கார நாய்... உருகவைக்கும் பதிவு! Description: பாம்புடன் சண்டையிட்டு எஜமானரை காப்பாற்றி... தன் உயிரையே விட்ட பாசக்கார நாய்... உருகவைக்கும் பதிவு!

பாம்புடன் சண்டையிட்டு எஜமானரை காப்பாற்றி... தன் உயிரையே விட்ட பாசக்கார நாய்... உருகவைக்கும் பதிவு!


பாம்புடன் சண்டையிட்டு எஜமானரை காப்பாற்றி...  தன் உயிரையே விட்ட பாசக்கார நாய்... உருகவைக்கும் பதிவு!

மனிதர்களை விட மிருகங்களுக்கு எப்போதுமே பாசம் அதிகம். அதிலும் நாய் தன் எஜமானர்கள் மீது வைக்கும் பாசம் அளவிடவே முடியாது. அவர்கள் பைக்கில் போனாலும், பின்னாலேயே வாலை ஆட்டிக் கொண்டு ஓடிவரும். அந்தவகையில் ஒரு வளர்ப்புநாய், தன் முதலாளிக்காக உயிரையே விட்டு நெகிழ வைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அதற்கு பப்பி என பெயரிட்டு அதை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தார். வழக்கமாக அதை அவர் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதேபோல் அன்றும் நடந்து சென்று கொண்டிருந்தார் தனது செல்ல பப்பியுடன்!

வயல் பகுதியில் அவர் நடந்து கொண்டிருந்தபோது புதருக்குள் இருந்து ஒரு கருநாகம் நடராஜனை கடிக்க படம் எடுத்து சீறியது. இமைப் பொழுதில் இதை கவனித்த பப்பி, பாம்பைக் கடித்து குதறியது. பாம்பு உயிர் இழக்கும் வரை வாயில் இருந்து அதை விடுவிக்காமல் வைத்திருந்தது பப்பி நாய்.

இதைக் கண்டதும் கண்ணீர் மல்க, தன் செல்ல நாய் பப்பியை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு போனார் நடராஜன். நடராஜன் வீட்டில் இருந்தவர்களிடம் நடந்தவற்றை சொல்லிக் கொண்டிருக்கும்போதே பப்பி மயங்கியது. அடுத்த சிறிதுநேரத்தில் இறந்தும் போனது. அதன் பின்பே, பாம்புடன் நடத்திய போராட்டத்தில் பப்பியும் கடிபட்டது தெரியவந்தது.

எஜமானரைக் காக்க உயிரையே விட்ட தன் செல்ல நாய் பப்பியை நினைத்து கண் கலங்கிக் கொண்டிருக்கிறார் நடராஜன்.


நண்பர்களுடன் பகிர :