இளம்பெண்ணை தற்கொலைக்குத் தள்ளிய பேஸ்புக் நட்பு... பெண்களே சமூகவலைதளங்களில் உஷாராக இருங்க : எச்சரிக்கை வீடியோ Description: இளம்பெண்ணை தற்கொலைக்குத் தள்ளிய பேஸ்புக் நட்பு... பெண்களே சமூகவலைதளங்களில் உஷாராக இருங்க : எச்சரிக்கை வீடியோ

இளம்பெண்ணை தற்கொலைக்குத் தள்ளிய பேஸ்புக் நட்பு... பெண்களே சமூகவலைதளங்களில் உஷாராக இருங்க : எச்சரிக்கை வீடியோ


இளம்பெண்ணை தற்கொலைக்குத் தள்ளிய பேஸ்புக் நட்பு... பெண்களே சமூகவலைதளங்களில் உஷாராக இருங்க : எச்சரிக்கை வீடியோ

முகநூல் என்று தமிழில் சொல்லப்படும் பேஸ்புக்கிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் முகநூலுக்கு அடிமைகளாகவே உள்ளனர். முகநூலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் பலர் இருக்க, சிலர் அதை தாறுமாறாகவும், தவறாகவும் பயன்படுத்தி சிக்கலில் சிக்கிக் கொள்வதும் உண்டு.

பேஸ்புக் அதிகம் பயன்படுத்தாத பெண் ஒருவர், அவரது தோழியின் மூலம் பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கினார். முகநூலில் இருக்கும் பெண்களைப் பார்த்ததும் பல ஆண்களும் ப்ரண்ட் ரொக்கொஸ்ட் கொடுப்பது வழக்கம். அதில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள் என நமக்குத் தெரியாது. அதே போல் அந்த பெண்ணும், அந்த நட்பை ஏற்றுக் கொண்டார். இவர்களது நட்பு தொலைபேசி எண்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு சென்றது.

திடீரென ஒருநாள் அந்த இளைஞர், இளம்பெண்ணிடம் தனக்கு அவரை பிடித்திருப்பதாக போன் போட்டு சொன்னார். உடனே அந்த பெண் அவரை திட்டிவிட்டு போனை கட் செய்தார். உடனே ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் அந்த பெண்ணின் புகைப்படத்தை, கால் கேர்ள் என குறிப்பிட்டு பேஸ்புக்கில் போட்டு விட்டார். இதனைக் கண்டதும் மனம் வேதனையடைந்த அந்த பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி!


நண்பர்களுடன் பகிர :