மருத்துவமனையில் உயிருக்கு போராடிய குழந்தை: தொலைந்த செல்போனை தேடிய தம்பதி! உருகவைக்கும் ஒரு பாசப் போராட்டம்..! Description: மருத்துவமனையில் உயிருக்கு போராடிய குழந்தை: தொலைந்த செல்போனை தேடிய தம்பதி! உருகவைக்கும் ஒரு பாசப் போராட்டம்..!

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய குழந்தை: தொலைந்த செல்போனை தேடிய தம்பதி! உருகவைக்கும் ஒரு பாசப் போராட்டம்..!


மருத்துவமனையில் உயிருக்கு போராடிய குழந்தை: தொலைந்த செல்போனை தேடிய தம்பதி! உருகவைக்கும் ஒரு பாசப் போராட்டம்..!

ஆஸ்திரேலியாவின் தலைநகர் மெல்பானில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 11 மாத கைக்குழந்தை அண்மையில் நரம்பியல் பிரச்னையால் இறந்தது.அந்த குழந்தையின் பெயர் அமையா.

அமையா நரம்பியல் பிரச்னையால் கடும் அவதிப்பட்ட நிலையிலும் அந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சுபவர்களைப் பார்த்தால் சிரித்துவிடும் வழக்கம் கொண்டது. இதையெல்லாம் பார்த்து தனது மொபைல் கேமராவில் வீடீயோவாகப் பதிவு செய்து வைத்திருந்தார் அந்த பிஞ்சுக் குழந்தையின் அம்மா.

என்னதான் உடல் உபாதைகள் வாட்டி எடுத்தாலும் அதை முகத்தில் துளிகூட காட்டாமல், குழந்தை தனத்துக்கே உரிய துள்ளளோடும், மலர்ந்த மலத்தோடுமே எப்போதுமே காட்சியளித்திருக்கிறார் அமையா.

கடந்த 20ம் தேதி உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமையா. இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்ட குழந்தையின் தந்தை உருக்கமான ஒன்றையும் அதில் எழுதியிருந்தார். அதில், ‘’என் வொய்ப்போட போனை யாரோ திருடிட்டாங்க. என் பொண்ணு அமையா இப்போ தீவிர சிகிட்சையில் உயிருக்கு போராடிட்டு இருக்கா.

அவளோட நினைவு எல்லாம் அந்த போனில் தான் இருக்கு. அதை அழிச்சுடாதீங்க. என் பொண்ணோட வாழ்நாள் ரொம்ப சின்னது. அதன் நினைவைத்தான் பொக்கிஷமா வைச்சுருக்கோம். அந்த நினைவுகளை எங்க போணுக்கு அனுப்பிட்டு, அந்த போனை நீங்களே வேண்ணா வைச்சுக்கோங்க. புதுபோன் கூட வாங்கிக் கொடுக்குறோம். இது தான் என் போன் நம்பர்” என நீள்கிறது பதிவு.

இந்த பதிவை ஆஸ்திரேலிய மக்கள் அதிக அளவில் சேர் செய்திருந்தனர். இதனிடையில் அந்த அழகு குழந்தை அமையா நேற்று அதிகாலை 2 மணி அளவில் அந்த குழந்தை இறந்து போனது. அதுகுறித்தும் அந்த குழந்தையின் தந்தை உருக்கமாக ஒரு பதிவு போட, அதை படித்து உடைந்து, உருகி அழுது வருகின்றனர் ஆஸ்திரேலிய வாசிகள்.


நண்பர்களுடன் பகிர :