பல உயிர்களை காப்பாற்றி வீரமரணம்... வெடிகுண்டுடன் வந்தவரை தடுத்துநிறுத்தி உயிர்துறந்த வாலிபர்..! Description: பல உயிர்களை காப்பாற்றி வீரமரணம்... வெடிகுண்டுடன் வந்தவரை தடுத்துநிறுத்தி உயிர்துறந்த வாலிபர்..!

பல உயிர்களை காப்பாற்றி வீரமரணம்... வெடிகுண்டுடன் வந்தவரை தடுத்துநிறுத்தி உயிர்துறந்த வாலிபர்..!


பல உயிர்களை காப்பாற்றி வீரமரணம்... வெடிகுண்டுடன் வந்தவரை தடுத்துநிறுத்தி உயிர்துறந்த வாலிபர்..!

இலங்கை குண்டுவெடிப்பின் சோகம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. ஈஸ்டர் தினத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 350க்கும் அதிகமானோர் துள்ளத், துடிக்க உயிர் இழந்தனர். இதில் பல சோகம் ததும்பிய உண்மைகள் இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன.

இதில் வெடிகுண்டுடன் வந்தவரை வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி, பல உயிர்களைக் காப்பாற்றி வீரமரணம் அடைந்துள்ளார். மட்டக்களப்பு தேவாலயத்தில் தனது தோளில் கனத்த பையுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதியை ரமேஷ் என்ற வாலிபர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதற்கு முன்பு அந்த தேவாலயத்தில் யாரும் பார்த்திராத புதுமுகம் என்பதால் தான் ரமேஷ் அவரை தடுத்து நிறுத்தி இருந்தார். அப்போது அதற்கு அந்த தீவிரவாதி ஈஸ்டர் ஆராதனையை படம்பிடிக்க வந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் அதில் நம்பிக்கை இழந்த ரமேஷ் தீவிரவாதியை தேவாலயத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதி தேவாலய வாசலிலேயே வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் தீவிரவாதியோடு சேர்ந்து, அவரைத் தடுத்து நிறுத்தி பலரது உயிரைக்காத்த ரமேஷ்ம் உயிர் இழந்தார். அதேநேரம் தீவிரவாதி தேவாலயத்துக்குள் சென்றிருந்தால் இன்னும் உயிர் இழப்பு கூடியிருக்கும். அனைவரது உயிரையும் காப்பாற்றி தன் மனைவி, இருபிள்ளைகளையும் தவிக்க விட்டு சென்று விட்டார் ரமேஷ். இவரது சேவையை இலங்கை மக்கள் மதித்து போற்றி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :