சேவைக் குறைபாடு: தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்... தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணிகளுக்கு நிகழ்ந்த அநியாயம்...! Description: சேவைக் குறைபாடு: தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்... தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணிகளுக்கு நிகழ்ந்த அநியாயம்...!

சேவைக் குறைபாடு: தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்... தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணிகளுக்கு நிகழ்ந்த அநியாயம்...!


சேவைக் குறைபாடு: தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்... தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணிகளுக்கு நிகழ்ந்த அநியாயம்...!

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு கல்லடா என்னும் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆழப்புழா அருகில் உள்ள ஹரிப்பேட் என்ற இடத்தில் இருந்து, ஆள்களை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டது. சிறிதுநேரத்தில் புரேக் டவுண் ஆகி நின்றுவிட்டது.

இதற்கு மாற்றுப் பேருந்தும் வந்து சேரவில்லை. திருவனந்தபுரம்_பெங்களூர் இடையே மொத்த பயண நேரம் 14 மணிநேரம். நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் கோபத்துடன் டிரைவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனா அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இதனால் சச்சின், ஆஸ்கர் என்ற இரு இளைஞர்கள் டிரைவர், பேருந்தில் உடன்வந்த க்ளீனர் ஆகியோரோடு வாக்குவாதம் செய்தனர். பிரச்னை பெரிதானதும் சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். அவர்கள் டிராவல்ஸின் தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு புதிய பேருந்தை தயார் செய்யச் சொல்லிவிட்டு சென்றனர். மூன்று மணி நேரத்துக்கு பின்பு சரிசெய்யப்பட்டு, பேருந்து அங்கிருந்து கொச்சி வைட்டாலா என்னும் பகுதிக்கு சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீதும், டிரைவர் மற்றும் சிலர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதோடு பஸ்ஸில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கியும் விட்டனர்.

அப்போது அந்த இரு இளைஞர்களும் நாங்கள் 1000 ரூபாய் கொடுத்துத்தான் பஸ்ஸில் பயணம் செய்கிறோம் எனச் சொல்ல, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடிக்கின்றனர். இதை பேருந்தில் இருந்த பயணி ஒருவரே வீடீயோ எடுத்து சோசியல் மீடீயாக்களில் வெளியிட்டுள்ளார். இதனிடையே அந்த பேருந்து நிறுவனம், இரு இளைஞர்களும் சேர்ந்து தங்கள் பேருந்தின் டிரைவரை தாக்கியதாக அவர்களது சோசியல் மீடீயா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இவ்விவக்காரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :