சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட வீரத்தாய்! Description: சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட வீரத்தாய்!

சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட வீரத்தாய்!


சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட வீரத்தாய்!

மாறி வரும் பருவநிலைகள் வனப்பகுதியையும் புரட்டி எடுத்து வருகிறது. இதனால் தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக காட்டு விலங்குகளும் கூட, இப்போதெல்லாம் ஊருக்குள் படையெடுக்கத் துவங்கி விட்டனர். இதனால் மனிதர்கள் படும்பாடுகளும் சொல்லி மாளாதவை.

அப்படி ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை வயதே ஆன குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருக்க, அதை தூக்கிச் செல்ல பார்த்தது சிறுத்தை. எப்படி அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

புனேவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைகிராமம் அது. அங்கு தீபாலி என்ற பெண் ஒருவர் இருந்தார். இவரது மொத்த குடும்பமும் இங்கு இருக்கும் மலைப்பகுதி ஓரமாக கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். தீபாலிக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உள்ளது.

தன் குடிசை வீட்டின் வெளியே இரவில் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தார் தீபாலி. அப்போது அங்கு வந்த சிறுத்தைப்புலி தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்ததும் தன் வாயால் தூக்கியது. சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு தீபாலி எழுந்துவிட்டார். அப்போது குழந்தையின் தலையை சிறுத்தை வாயால் கவ்வி வைத்திருந்தது. உடனே சிறுத்தையை தன் கையால் அடித்தாட் தீபாலி. உடனே குழந்தையை கீழே போட்டுவிட்டு தீபாலியின் கையை பிடித்துக் கொண்டது சிறுத்தைப் புலி.

தொடர்ந்து தீபாலி சப்தம் போட, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைப் பார்த்ததும் சிறுத்தைப்புலி தப்பி ஓடியது. சிறுத்தை கடித்ததில் தீபாலியின் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தாயும், சேயும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனர்,. சிறுத்தையுடன் போராடி தான் பெற்ற குழந்தையை மீட்ட இந்த வீரமங்கைக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :