தங்கமங்கை கோமதிக்கு ரோபாசங்கர் செய்த மரியாதை... தன் வாழ்க்கை கஷ்டத்தையும் பேசி உருக்கமான வீடீயோ...! Description: தங்கமங்கை கோமதிக்கு ரோபாசங்கர் செய்த மரியாதை... தன் வாழ்க்கை கஷ்டத்தையும் பேசி உருக்கமான வீடீயோ...!

தங்கமங்கை கோமதிக்கு ரோபாசங்கர் செய்த மரியாதை... தன் வாழ்க்கை கஷ்டத்தையும் பேசி உருக்கமான வீடீயோ...!


தங்கமங்கை கோமதிக்கு ரோபாசங்கர் செய்த மரியாதை...   தன் வாழ்க்கை  கஷ்டத்தையும் பேசி உருக்கமான வீடீயோ...!

ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் தங்கமங்கை கோமதி. தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் இந்திஹ்யா வென்ற முதல் தங்கம் இதுதான்!

கோமதி மைதானமே இல்லாத கிராமத்தில் இருந்து உருவானவர். தனது எளிமையான குடும்ப பிண்ணனியில் இருந்து இவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். தந்தையின் மரணம், தாயின் உடல்நலமின்மை, பயிற்சியாளரின் மரணம் என தொடர் சோதனைகளைக் கடந்த சாதனை இது! இப்போது இந்த தங்கமங்கையின் வெற்றிக்காக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்ச ரூபாய் அன்பளிப்பாக தருவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடீயோ ஒன்றும் வெளியிட்டுள்ளார் ரோபோ சங்கர். அதில் அவர், ‘’நம் எல்லைசாமிகளான இந்திய இராணுவ வீரர்கள் இறப்புக்கு வருத்தத்தில் நம் தமிழகத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும்வகையில் தலா ஒரு லட்சரூபாய் கொடுத்தேன். இம்முறை ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற என் சகோதிரி கோமதிக்கு ஒருலட்ச ரூபாய் அன்பளிப்பாக, பெருமையுடன் தருகிறேன்.

தனது தந்தை, கோட்ச் இறப்புக்கு பின்னர், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்ற தங்கமங்கை கோமதிக்காக சந்தோசப்படுகிறேன். நானும் கஷ்டப்பட்ட குடும்ப பிண்ணனியில் இருந்து வந்தவன் தான்.

கஷ்டப்படும் குடும்பத்தின் வலி எனக்குத் தெரியும். அதைத்தாண்டி இந்த சாதனையை செஞ்சதுக்கு தலைவணங்குகிறேன். இது பெண்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.”என பேசியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :