ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற இறைவன்! மதுரை கள்ளழகர் விழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..! Description: ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற இறைவன்! மதுரை கள்ளழகர் விழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற இறைவன்! மதுரை கள்ளழகர் விழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!


ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற இறைவன்!  மதுரை கள்ளழகர் விழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

விர்...விர்ரென வீறிட்டு சப்தம் எழுப்பி வரும் ஆம்புலன்ஸைப் பார்த்தால் என்ன தான் ட்ராபிக் இருந்தாலும் வாகன ஓட்டிகள் வழிவிட்டு விடுவார்கள். அப்படி மதுரை கள்ளழகரே ஒதுங்கி நின்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு உலகப் பிரசித்தி. இந்த ஆண்டு இவ்விழா கடந்த 19ம் தேதி நடந்தது. அதிகாலை 6 மணிக்கே பச்சைப் பட்டு உடித்தி குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்.இந்நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர்.

இந்த விழாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்துள்ளது. அதாவது அந்த பகுதி வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால் முன்னோக்கி போன, கள்ளழகர் மீண்டும் பின்னால் சென்று வழிவிடும் சம்பவம் நடந்துள்ளது. ஆம்...ஆயிரக்கணக்கான பக்தர்களின் நடுவே கம்பீரமக கள்ளழகர் வலம்வர, ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை[ப் பார்த்த கள்ளழகரை தூக்கிச் சென்றவர்கள், கள்ளழகரோடு வழிவிடுகின்றனர். பக்தர்களும் ஒதுங்கி நின்று வழிவிட்டனர்.

ஆம்புலன்ஸ்க்கு அந்த பகவானே வழிவிடுகிறார். நாமும் வழிவிடுவோம் என சோசியல் விழிப்புணர்வு வாசகத்தோடு இந்த வீடீயோவை வைரலாக்கியுள்ளனர் நம்ம மதுரை மக்கள்!


நண்பர்களுடன் பகிர :