அடேங்கப்பா...இந்த லேடி கலெக்டர் செஞ்ச வேலையைப் பாருங்க... ஒரு ராயல் சல்யூட் பார்சல் சேச்சி! Description: அடேங்கப்பா...இந்த லேடி கலெக்டர் செஞ்ச வேலையைப் பாருங்க... ஒரு ராயல் சல்யூட் பார்சல் சேச்சி!

அடேங்கப்பா...இந்த லேடி கலெக்டர் செஞ்ச வேலையைப் பாருங்க... ஒரு ராயல் சல்யூட் பார்சல் சேச்சி!


அடேங்கப்பா...இந்த லேடி கலெக்டர் செஞ்ச வேலையைப் பாருங்க... ஒரு ராயல் சல்யூட் பார்சல் சேச்சி!

அரசு வேலையில் ஏதோ சின்ன பணி கிடைத்துவிட்டால் கூட செம கெத்தாக நடந்து கொள்ளும் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் ஒயிட்காலர் ஜாப் என சொல்லக்கூடிய ஆட்சியர் பணியில் இருக்கும் பெண் ஒருவரின் செயல் கேரளத்தில் வைரலாகி வருகிறது.

கேரளத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன. திருச்சூரிலும் இதேபோல் நடந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியில் இருந்து, இறக்கி வைக்கும் பணியில் அதிகாரிகளும், காவலர்களும் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா ஒரு போலீஸ்காரர் வாக்குப்பதிவு இயந்திரத்தை கூட இருந்து பிடித்து இறக்கி வைக்க மற்றொருவருக்காக காத்திருப்பதைப் பார்த்தார். ஒருநொடி கூட தாமதிக்காமல், அவரே ஒரு கை பிடித்து பெட்டியை இறக்கியதுடன் உள்ளேயும் கொண்டு சென்றார்.

இதனைப் பார்த்ததும், அவரிடம் இருந்து பெட்டியை வாங்க வந்த அதிகாரிகளிடமும் சைகையால் மறுத்துவிட்டு முன்நகர்ந்தார் அனுபமா. இதை அங்கு நின்ற ஊழியர் ஒருவர் வீடீயோ எடுத்து சமூகவளைதலத்தில் போட அது இப்போது வைரலாகி வருகிறது. இந்த மலையாள சேச்சியை பாராட்டுவது நம் கடமையும் தானே!


நண்பர்களுடன் பகிர :