குண்டுவெடிப்பில் தன் பிள்ளைகள் மூவரை இழந்த கோடீஸ்வரர்.. டென்மார்க்கின் முதல் கோடீஸ்வரருக்கு நிகழ்ந்த சோகம்..! Description: குண்டுவெடிப்பில் தன் பிள்ளைகள் மூவரை இழந்த கோடீஸ்வரர்.. டென்மார்க்கின் முதல் கோடீஸ்வரருக்கு நிகழ்ந்த சோகம்..!

குண்டுவெடிப்பில் தன் பிள்ளைகள் மூவரை இழந்த கோடீஸ்வரர்.. டென்மார்க்கின் முதல் கோடீஸ்வரருக்கு நிகழ்ந்த சோகம்..!


குண்டுவெடிப்பில் தன் பிள்ளைகள் மூவரை இழந்த கோடீஸ்வரர்..  டென்மார்க்கின் முதல் கோடீஸ்வரருக்கு நிகழ்ந்த சோகம்..!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் விலை மதிக்க முடியாத 300க்கும் அதிகமான மனித உயிர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் போர்ப்ஸ் பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆண்டர்சன் தன் மூன்று குழந்தைகளையும் இழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டர்சனுக்கு மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். தொடர்ச்சியான பணி நெருக்கடிக்கு மத்தியில் ஒரு இளைப்பாறுதலாக இருக்கும் என குடும்பத்தோடு இலங்கைக்கு சுற்றுலா வந்தனர். இந்த நிலையில் தான் இலங்கை குண்டுவெடிப்பில் டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரரான ஆண்டர்சனின் மூன்று குழந்தைகள் உயிர் இழந்திருப்பது தெரியவந்தது.

ஆண்டர்சனுக்கு ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் ஒரு சதவிகிதம் சொந்தம். சற்றேறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கருக்கு அதிபதியான இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடி.

பிரிட்டனிலே அதிக நிலம் வைத்திருப்போர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆண்டர்சன் கோடை விடுமுறையை கழிக்க, குடும்பத்தோடு இலங்கை வந்தபோது இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் தன் மூன்று குழந்தைகளை துள்ளத், துடிக்க பலி கொடுத்து விட்டு தவித்து நிற்கிறார் ஆண்டர்சன்.


நண்பர்களுடன் பகிர :