இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை..! Description: இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை..!

இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி.. மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை..!


இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த தமிழச்சி..  மைதானமே இல்லாத ஊரில் பிறந்து நிகழ்த்திய சாதனை..!

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கி ஒட்டிமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்ந்துள்ளார் தமிழகத்தின் கோமதி.

திருச்சி மாவட்டத்தில் இவர் பிறந்த ஊரில் விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலையில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2.2.70 நேரத்துக்குள் பந்தய தூரத்தை ஓடி தங்கப் பதக்கம் வென்று இருக்கிறார்.

கோமதி வாங்கிக் கொடுத்த தங்கம் தான் இந்த தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம். இவரது சொந்த ஊரில் விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலையில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பள்ளிக் காலத்திலேயே தடகள போட்டிகளில் பங்கெடுத்து வரும் கோமதி, தனது 20வது வயதில் இருந்து தான் முறையான [பயிற்சி எடுக்கத் துவங்கினார். முப்பது வயதில் தங்கம் வென்றிருக்கிறார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கோமதி, விளையாட்டில் போதிய கவனமும், அக்கறையும் மட்டுமே செலுத்தும் குடும்ப சூழலில் பிறக்கவில்லை. இதனாலேயே வாழ்க்கை ஓட்டத்துக்கு வருமான வரித்துறையில் கிடைத்த வேலைக்கு சேர்ந்து கொண்டார். 2016ம் இருந்து, இப்போது வரை கோமதி கடந்து வந்திருக்கும் தூரம் மிகப் பெரியது. 2016ல் தன் தந்தையை இழந்தார். தொடர்ந்து அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து தாய் மனநலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் கூட அவரது பயிற்சியாளர் காந்தி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இத்தனை வலிகளுக்கு மத்தியில் போதிய பயிற்சியும், தீவிர முயற்சியும் சேர்ந்து கோமதியை வாகை சூடவைத்துள்ளது. நாமும் வாழ்த்துவோம்.


நண்பர்களுடன் பகிர :