செல்பி மோகத்தில் அலையும் கொரில்லாக்கள்... உலக அளவில் வைரலாகும் செல்பி போட்டோ...! Description: செல்பி மோகத்தில் அலையும் கொரில்லாக்கள்... உலக அளவில் வைரலாகும் செல்பி போட்டோ...!

செல்பி மோகத்தில் அலையும் கொரில்லாக்கள்... உலக அளவில் வைரலாகும் செல்பி போட்டோ...!


செல்பி மோகத்தில் அலையும் கொரில்லாக்கள்...    உலக அளவில் வைரலாகும் செல்பி போட்டோ...!

மனிதர்களை செல்பி மோகம் பிடித்து ஆட்டுவது ஊர் அறிந்த செய்தி. இப்போதெல்லாம் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதை செல்பியாக சூட் செய்யாவிட்டால் அவர்களுக்கு இருப்பு கொள்ளாது. இந்த செல்பிக்கு கொரில்லா குரங்குகளும் அடிமையாக இருக்கிறது என்றால் ஆச்சர்யம் தானே?

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கொரில்லா குரங்குகள் வளர்ந்து வருகின்றன. இந்த பூங்காவில் வனத்துறை ஊழியராக இருக்கும் மேத்யூ ஷவாமு என்பவர், இந்த கொரில்லாக் குரங்குகள் குட்டியாக இருக்கும்போதே அவைகளுடன் வித,விதமாக செல்பி எடுத்து வந்துள்ளார்.

இப்படி செல்பிக்கு பழக்கப்பட்டே வளர்ந்ததால் அங்கு இருந்த நடாகாஷி, மடாபிஷி என்ற இரு கொரில்லாக்களை செல்பி மோகம் தொற்றிக் கொண்டது.

உயிரியல் பூங்காவில் வேலை செய்யும் மேத்யூ தனது செல்போனை தூக்கிப் பிடித்தாலே செல்பி எடுப்பதாக எங்கு இருந்தாலும், இந்த இரு கொரில்லாக்களும் ஓடிவந்து போஸ் கொடுக்கிறது. அதுவும் ஏனோ, தோனோ என்று சும்மா ஒன்றும் நிற்பதில்லை. மனிதர்களைப் போலவே இவை இரண்டும் சும்மா ஸ்டைலாக போஸ் கொடுக்கின்றன. இப்போது மேத்யூ இதை தனது சோசியல் மீடியாக்களில் வெளியிட இந்த இரு கொரில்லாக்களும் உலக அளவில் டிரெண்டாகி வருகின்றன.


நண்பர்களுடன் பகிர :