10 லட்சம் பரிசு வாங்கிய பூவையாரின் ஆசை என்ன தெரியுமா? Description: 10 லட்சம் பரிசு வாங்கிய பூவையாரின் ஆசை என்ன தெரியுமா?

10 லட்சம் பரிசு வாங்கிய பூவையாரின் ஆசை என்ன தெரியுமா?


10 லட்சம் பரிசு வாங்கிய பூவையாரின் ஆசை என்ன தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் மூன்றாம் இடம் பிடித்தார் பூவையார்.

பூவையாருக்கு முதலிடம் தான் கிடைக்கும் என ரசிகர்கள் பலரும் ஆரூடம் சொன்ன நிலையில், மூன்றாவது பரிசு அறிவிக்கப்பட்டது. இதனோடு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது

பரிசு பெற்ற உற்சாகத்தோடு மேடையில் பேசிய பூவையார், ‘’இந்த வெற்றியை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எனக்கு வாக்களித்தோருக்கும், என் வெற்றிக்கு காரணமான உறவுகளுக்கும் நன்றி.”என்றார்.

அண்மையில் முதலில் தன் கைக்கு வரும் அதிக சம்பளத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என விரும்புவதாக அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் பூவையார். இப்போது பத்து லட்ச ரூபாய் பரிசுத்தொகை கிடைத்ததால் பூவையாரின் கனவும் நிறைவேறப்போகிறது.

ஆனாலும் ஈழத்து சிறுமி சின்மயிக்கு பரிசு கிடைக்காத சோகமும் இன்னும் பலரிடமும் உள்ளது.


நண்பர்களுடன் பகிர :